31

6.1K 265 62
                                    

"எங்ககிட்ட கோவப்பட்ற மாதிரி அந்த பையன்கிட்டயும் கோவப்படாம பொறுமையா நிதானமா பேசிட்டுவா புரியுதா ".....என்ற தன் தாயை மேலும் கீழும் பார்த்தவள்.......

"நான் கிளம்புறேன் ".....என்றுவிட்டுச் சென்றாள்.

.
.
.
.
"ஏன் இவ்ளோ சீக்கிரம் கிளம்பலாம்னு சொல்ற. எங்கயாவது வெளிய போயிட்டு வீட்டுக்கு போலாமே ப்ளீஸ். ".......என்க....

"இல்ல மேஹா ஒரு இம்பார்டன்ட் வர்க். ராகவ் சார் இன்னிக்கே முடிக்கனும்னு சொல்லிருக்காரு. அது விஷயமா தான் போறேன். ".....என்றதும் புரிந்துக் கொண்டவள்......

"ஒகே கிளம்பு. நானும் கிளம்பறேன். "...,,என்றவளின் முடியை பிடித்திழுத்தவன்.....

"எங்க கிளம்புற வந்து வண்டில ஏறு. உன்ன ட்ராப் பன்னிட்டு போறேன். "....என்றான்.

"ஒகே " ...என்றவள் அமர்ந்ததுமே சக்தியின் தோளில் சாய்ந்துக் கொண்டாள். சக்தியும் அதை தடுக்கவில்லை.

சஞ்சயை பற்றிய விவரங்களை தன் தந்தையின் மூலம் அறிந்துக் கொண்டவள் வேண்டா வெறுப்பாக கேஃ காபி டேவினுள் நுழைந்தாள்.

சஞ்சய் மூன்றாவது டேபுளில் அமர்ந்திருப்பதை பார்த்தவள் அவனருகில் செல்ல....... கையை நீட்டியவன்......

"ஐயம் சஞ்சய் அன்ட் ஐயம். "..... என அவன் முடிக்கும் முன்......

"சமுத்திரா ".....என்றவள்...... "தமிழயே பேசலாம் ".....என்றாள். அவள் மறந்தும் அவளுக்கு கை கொடுக்கவில்லை. அதை கவனித்தவன் எரிச்சலை வெளியே காட்டிக் கொள்ளாமல்.....

"ஒகே தமிழயே பேசலாம். ".....என்றபடி அவளை மேலிருந்து கீழ்வரை அளவெடுத்தான்.

"உனக்கு சுடியவிட இந்த ஜீன், டீஷட், ஷார்ட் ஸ்கர்ட் இதெல்லாம் பெட்டரா இருக்கும். ட்ரை பன்னி பாரேன். ".....என்றான்.

"ப்ச் லுக் மிஸ்டர் சஞ்சய் வந்த விஷயம் என்னவொ அத பத்தி மட்டும் பேசுவோமா? "....என்றாள்.

"ஒகே ஓகே...., என்றவன் "ஸ்ரெயிட்டா சொல்றேன் எனக்கு உன்ன புடிச்சிருக்கு. நாம இரண்டு பேரும் மேரேஜ் பன்னிக்கலாம். மேரேஜ்கு அப்றம் கண்டிப்பா நீ பிஜி தான் பன்னனும். அது உனக்கு புடிச்ச ஏதோ ஒன்னு. எம்எஸ் முடிச்சிட்டு நியூரோ எடுத்தாலும் எனக்கு ஒகே தான். அதவிட்டுட்டு சில்லியா  பிஹெச்சில பிராக்டீஸ் பன்னாத புரியுதா. தென்.... "என மேலும் ஏதோ சொல்ல வந்தவனை கை உயர்த்தி நிறுத்தியவள்......

இரவா பகலாWhere stories live. Discover now