30

5.9K 300 64
                                    

பள்ளி திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆட்சியர், கல்விதுறை அதிகாரி மற்றும் சேலம் மாவட்டத்தின் சிறந்த மருத்துவரான முத்துகிருஷ்ணன் அவர்களும் அவரது புதல்வன் சஞ்சய் மற்றும் ராகவேந்திரன் அமர்ந்திருக்க தமிழ் தாய் வாழ்த்திலிருந்து விழா துவங்கப்பட்டது.
சக்தியும் மேஹாவும் முதல் வரிசையில் அமரந்திருக்க சக்தியின் தாய் தந்தையர் சக்தியை தேட மேஹா அவர்களை அழைத்து வந்து அருகில் அமர வைத்துக் கொண்டாள். முத்துகிருஷ்ணன் நரம்பியல் அறுவைசிகிச்சை மருத்தவர். சஞ்சையும் அதே துறையை தேர்ந்தெடுத்து படித்துக் கொண்டிருக்கிறான்.

"ஏன்மா இவ்ளோ லேட்டு "....என்றவன் சாரதாவை முறைக்க சமாளிக்கத் தெரியாமல்.....

"நாங்க கரக்ட் டைம்க்கு தான் வந்தோம் நீங்க பங்ஷன சீக்கிரம் ஆரம்பிச்சிட்டிங்க ".....என்றதும்....

"இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல ".....என்றவன் மேடையை கவனிக்க அங்கு பள்ளியின் முதல்மை ஆசிரியர் அனைவரையும் வரவேற்றபின் மாவட்ட ஆட்சியரை உரையாற்றும்படி அழைத்தார்.... கல்வியின் முக்கியத்துவத்தைப் பற்றி பேசியவர் விடைப் பெற்றுக் கொள்ள அடுத்து முத்துகிருஷ்ணனின் உரையாடல் துவங்கியது. அனைவரும் மருத்தவ துறையை தேர்ந்தெடுத்து மக்களுக்கு சேவை செய்யும்படி கூறியவர் உரையாடலை முடித்துக் கொள்ள அடுத்து டாக்டர் சஞ்சய் உரையாடல் துவங்கியது ....அடிக்கடி சாராதா வாசலை எட்டிப்பார்ப்பதை கவனித்த சக்தி.......

"யாரமா தேடுற "......என்க.....

"இந்த சமு வரேனு சொன்னா ஆள காணோம் அதான் பார்க்குறேன். "......என்றதும்......

"ஏன் அவ உங்க கூட வரமாட்டாளோ. மேடம் அப்படி என்ன பிசியா இருக்காங்க. ".....என்றான்.

"அவளும் எங்க கூடதான் கிளம்புனா அப்றம் ஏதோ கால் வந்துச்சினு நீங்க போங்க நான் வரேனு சொல்லிட்டு போனவ இன்னும் வரல. ".....என்றார்.

மாணவ மாணவிகளுக்கு புரியும் படி இயல்பாக பேசிக் கொண்டிருந்தவன் சற்று தடுமாற அவனது விழி சமுத்திராவின் மீதிருந்தது. சக்தி தேர்ந்தெடுத்த ஆடையில் பளிச்சென மின்னியவள் முடியை பின்னலிடாமல் ப்ரீ ஹேரில் வந்திருந்தாள். சக்தி எதேர்ச்சையாக திரும்ப அவனும் சமுத்திராவை பார்த்துவிட்டான். ஒரு நிமிடம் அவளையே பார்த்தவன் அவளுடன் உதயா வருவதைக் கண்டு கோவம் உச்சந்தலைக்கு ஏறியது. அவளுடன் சேர்ந்து உதயாவும் தாமதமாக வருவது அவனுக்கு எரிச்சலூட்டியது. உதயா சக்திக்கு ஹாய் சொன்னபடி அருகில் அமர அவனை முறைத்தவன்........

இரவா பகலாWhere stories live. Discover now