அந்த குளிரூட்டப்பட்ட அறையில் பாதி நரைத்த முடி, மூக்குக் கண்ணாடி, கருப்பு நிற கோர்ட் ஷூட்டுடன் கம்பீரமாக வீற்றிருந்தார் ராகவேந்திரன்.
அவர் எதிரில் சக்தியும் ஓரு பெண்ணும் அமர்ந்திருக்க.. ராகவேந்திரனின் குரல் கணீரென்று ஒலித்தது.
"சக்திதரன் அன்ட் மேஹா ரைட் "...என்றதும் இருவரும் ஒரு சேர "எஸ் சார் "...என்றிட...
"ம்ம்ம் குட் "...என்றவர் ஒருமுறை குரலை சரிசெய்துவிட்டு,..
"ஓகே வந்த பத்துப் பேருல ஸ்பெசிஃபிக்கா உங்க ரெண்டு பேர மட்டும் ஏன் செலக்ட் பன்னிருக்கேன் தெரியுமா?...எனி கெஸ் ",,.என்றவர் ஆர்வமாகப் பார்க்க இருவருக்குமே அதற்கான விடைத்தெரியவில்லை.
இருவரையும் பார்த்து உதட்டைப் பிதுக்கியவர்.,."கெஸ் பன்ன முடியலையா? ,,ஓகே நானே சொல்லிட்றேன் நேர்மை"... என்றார் .
நேர்மை என்ற சொல்லில் மட்டும் அழுத்தம் அதிகமாயிருந்தது.
"எனக்கெப்படிடா தெரியும்னு பார்க்கிறிங்களா? "...என்றிட இருவரும் ஆமாம் என்பதைப் போல் பார்க்க...
"என் கம்பெனில இன்டர்வீவ் அட்டன் பன்றவங்கல பத்தி நான் முன்னாடியே விசாரிச்சு தெரிஞ்சிப்பேன்.இது அநாகரிகம்னு நீங்க நினைக்கலாம் ஆனா, என்னப் பொருத்தளவு நேர்மையா இல்லாம இருக்கிறதுக்குப் பேர் தான் அநாகரிகம்.",.என்றவர் சில நொடி இடைவெளி விட்டு...
"இந்ந கம்பனிய நான் உருவாக்கினபோது எனக்கு வயசு முப்பத்திரண்டு .அப்றம் நானும் என் கம்பெனியும் பிரபலமாகுறத்துக்கு பதினஞ்சு வருஷம் ஆச்சு. ஏன் தெரியுமா? "... என நிறுத்தியவர் இருவர் முகத்தையும் பார்க்க அவர்கள் முகத்தில் அதை தெரிந்துக் கொள்ளும் ஆர்வமிருந்தது.
"நான் நேர்மையா இருந்தது தான் காரணம். அப்படி இல்லாம தப்பான வழில இந்த கம்பெனிய நடத்திருந்தனா ஐஞ்சு வருஷத்திலேயே பெரியளவுல முன்னேறிருக்கலாம். ஆனா எனக்கு அதுல விருப்பம் இல்ல.என் கம்பெனி கடைசி வரைக்கும் இதே இடத்துல இருக்கனும்னா என்ன சுத்தி இருக்கிறவங்களும் நேர்மையா இருக்கனும்னு நினைச்சேன்.இதையெல்லாம் உங்ககிட்ட மட்டும் இல்ல இங்க வொர்க் பன்ற. எல்லார்க்கிட்டையும் சொல்லிருக்கேன்" ,,. என்றவர் தன் உரையாடலை முடித்துக்கொள்ள ..,சக்தியும் மேஹாவும் ஒரு சேர கைத்தட்டி...
YOU ARE READING
இரவா பகலா
Randomகாரசாரமான காதல் கதை உங்களோட ஆதரவிற்கு நன்றி தோழமைகளே! ஆனா கதை சுமாரா இருந்தா என்ன திட்டாதிங்கோ