4

9K 261 36
                                    

அப்பா நான் ஒரு முடிவு எடுத்தா அது கரக்டா தான் இருக்கும்னு சொல்லுவிங்கல,...

ம்ம்ம் ஆமா டா,..நீ எந்த முடிவு எடுத்தாலும் அதுல ஒரு தெளிவு இருக்கும் கரக்டாவும் இருக்கும். பின்ன நீ என் பொண்ணாச்சே என்றவர் தானே வாயை கொடுத்து மாட்டிக் கொண்டார்.

அப்பா அதுவந்து...அது.,.எனக்கு சக்திய புடிக்கல. அதனால எனக்கு இந்த கல்யாணம் வேண்டா பா ப்ளீஸ்..,

எ,..என்னம்மா சொல்ற. நீதான அன்னக்கி கல்யாணத்துக்கு சம்மதம்னு சொன்ன.அதனால தான நான் சாரதாகிட்ட பேசுனேன்.,.ஆனா நீ.,என்றவரை இடைமறித்தவள்,..

நான் சம்மதம் சொன்னது உண்மை தான்.ஆனா நான் இப்போ நல்லா யோசிச்சு தான் சொல்றேன். எனக்கும் சக்திக்கும் கொஞ்சம் கூட செட் ஆகாதுபா. இது வாழ்க்கை பிரச்சனை அவசரப்பட்டு முடிவு எடுத்து அது தப்பா போயிடுச்சுனா .,.அதனால தான் சொல்றேன் எனக்கு இந்த கல்யாணம் வேண்டா..,

எனக்கு என்ன சொல்றதுனே தெரியலடாம்மா .எனக்கு உன் சந்தோஷம் தான் முக்கியம். ஆனா சாரதாவ எப்படி சமாளிக்கிறதுனு தான் தெரியல.

நான் அத்தைக்கிட்ட பேசறேன். நான் சொன்னா கண்டிப்பா கேப்பாங்க .,

ம்ம்ம் சரிடா கண்ணு .நான் அத்தைக்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்றேன். அப்றம் நீ பேசு.இப்போ போய் உன் அம்மாவ சமாளிக்கிறேன் என்றவர் இணைப்பை துண்டித்தார்.

சமுத்திராவிற்கு
சக்தி தன்னை சந்தித்து பேசியவற்றைக் கூறி இந்த திருமணத்தை நிறுத்த விருப்பமில்லை. 


சாரதா இரவிற்கான உணவை தயார் செய்து கொண்டிருக்க ராம கிருஷ்ணன் நியூஸ் பார்த்துக் கொண்டிருந்தார்.

சக்தி சற்று முன் தான் வீட்டிற்கு வந்திருந்தான்.

அம்மா எனக்கு டீ போட்டுக் குடு செம்மையா தலை வலிக்குது,..

சாரதா அதை எதையும் கவனிக்காதது போல் தன் வேலையை தொடர,.,

ஆமா,.. சார் வேலைக்கு போயிட்டு ரொம்ப களைச்சி போய் வந்துருக்காரு. டீ போட்டுக் குடுமா...என ராம கிருஷ்ணன் ஹாலிலிருந்தபடி கேளி பேச சக்திக்கு கோபம் தலைக்கு ஏறியது.

இரவா பகலாWhere stories live. Discover now