சக்திக்கு மதிய உணவை எடுத்து வைத்துக் கொண்டிருந்தவளுக்கு மிளகாய் தூளைப் பார்க்க ஒரு யோசனைத் தோன்றியது.ஒரு நொடிக் கூட தாமதிக்காமல் சாம்பார் இருந்த பாக்ஸில் மிளகாய் தூளை அள்ளி கொட்டிவிட்டாள்.
"இது என்ன தண்ணி ஊத்தி எழுப்பினதுக்கு. ரொம்ப ஸ்பைசியா இருக்கும் "...என்றவள் அவனிற்கு காலை உணவை பரிமாறினாள்.
அவன் நடந்ததிற்கு மன்னிப்பு கேட்டதில் பாக்ஸை மாற்றிவிடலாம் என்று யோசித்தவள்....
"ம்ஹூம் "...எனத் தலையாட்டிவிட்டு அவனது பேகில் வைத்துவிட்டாள்.
மதியம் உணவுண்ணும் வேளையில் உண்டவனுக்கு கண்களில் நீர் தேங்கி நின்றது.
அவனது அவஸ்தயை புரிந்துக் கொள்ளாமல் மேஹா கேள்வி மேல் கேள்வி எழுப்ப அவளிடம் கை உயர்த்தி அமைதியாக இருக்கச் சொன்னவன் வாஷ் ரூமில் நுழைந்துக் கொண்டான்.
காரம் தலைக்கு ஏற தலை சுற்றுவது போல் இருந்தது.சுமார் பத்து முறைக்கு மேல் வாயை கழுவியவனுக்கு எரிச்சல் மட்டும் அடங்கவில்லை.வெளியே வந்தவன் மேஹாவிடம் ஜெலுசில் வாங்கி வரச் சொல்லி அதை குடித்தான்.ஒருவாரு எரிச்சல் அடங்க சமுத்திராவின் நினைவு வந்தது. அந்நேரம் அவள் அருகிலிருந்திருந்தாள் அவ்வளவு தான்.அவள் மீது கொலை வெறியில் வீடு வந்து சேர்ந்திருந்தவன் அவன் அழைத்தும் அவள் அலட்சியமாகச் சென்றதில் கோவம் தலைக்கு ஏறியது.அதே கோவத்துடன் அவள் பின்னோடுச் சென்றவன் அவளை பிடித்திழுத்துத் திருப்பினான்.
அவளின் இதழின் ஓரத்தில் இரத்தம் கசிந்துக் கொண்டிருக்க அவளது கண்கள் அழுததில் வீங்கியிருந்தது.அவளது இரு கன்னத்திலும் யாரோ அறைந்ததற்கு சாட்சியாக ஐந்து விரல்கள் பதிந்த தடம் தெரிந்தது.கையில் ஆங்காங்கே சீராய்ப்பு இருக்க அவளது ஆடையில் ஆங்காங்கே மண் ஒட்டியிருந்தது.
"என்னடி ஆச்சு ".,,என்றவனுக்கு உள்ளூர இதயம் வேகமாக துடிக்கத் துவங்கியது.
"நத்திங் "...என்றவள் அவனது கைக்குள் இருந்த அவளது கையை உருவிக் கொண்டு அவளது அறையில் புகுந்துக் கொள்ள கதவினை வேகமாக திறந்துவிட்டு உள்ளே நுழைந்தவன் அதட்டும் குரலில் ...
YOU ARE READING
இரவா பகலா
Randomகாரசாரமான காதல் கதை உங்களோட ஆதரவிற்கு நன்றி தோழமைகளே! ஆனா கதை சுமாரா இருந்தா என்ன திட்டாதிங்கோ