"அவ என்ன பன்னானு தெரியுமா ?.நேத்து லஞ்ச்சுக்கு சாம்பார்ல மிளகாய் தூள போட்டுக் கொடுத்தனுப்புறா.அத சாப்புட்டு நான் பட்டப்பாடு எனக்கு தான் தெரியும்.அதான் அடிச்சேன்."....என்றதும் சக்திக்கு அரை மாறி மாறி விழ சமுத்திராவோ எதற்காக சக்தி இவ்வாறு மாற்றிக் கூற வேண்டும் என்ற சிந்தனையிலிருந்தாள்.
அரை விழும் சத்தம் கேட்டு திரும்பியவள்
"அய்யோ சாரு "...என்றபடி சாரதாவை இழுக்க அது அவளால் முடியவில்லை.
சிரமப்பட்டு சாரதாவை இழுத்தவள் இருவருக்கும் இடையே நின்றுக்கொண்டாள்."என்ன அத்த பன்ற "....என்றதும் மீண்டும் உக்கிரமானவர் ...
"நீ சும்மா இருடி"...என்றபடி மீண்டும் சக்தியை அடிக்கச் செல்ல.....
"சாரு ப்ளீஸ்"....என சாரதாவை இறுக பிடித்துக் கொண்டாள்.
"பாத்தியாடா நீ இவள அடிச்ச ஆனா இவ உன்ன அடிக்க விடாம புடிச்சி வச்சிருக்கா.இதான்டா உனக்கும் அவளுக்கும் உள்ள வித்தியாசம். "...என்றதும் முந்திக் கொண்டவள்.
"என்ன நடந்ததுன்னு புரியாம பேசாத சாரு. உண்மையாலும் என்ன நடந்துச்சினா "....
என்றவளை பேசவிடாமல் ...."அவ தேவையில்லாம எங்கிட்ட வம்பிழுத்தா அதான் அடிச்சேன்.இனிமேலும் வம்பிழுத்தா அடிப்பேன்."....என்றான்.
"ம்ம்ம் அடிப்படா அடிப்ப.நீ அடிக்கிறவரைக்கும் நான் சும்மா இருப்பேனு பாத்தியா கைய உடைச்சி அடுப்புல வச்சிருவேன்"....என்றதும்....
சக்தி "அம்மா " ...என்று கத்த, ,,,"என்னடா குரல உசத்துற. என்ன ஏன் இப்படி வர வர மிருகமா மாறிட்டு வர. நீ உண்மையாலுமே என் புள்ளதானாடா. எனக்கு சந்தேகமா இருக்கு "....என்றார்.
இம்முறை சாந்தமாக சக்தி "அம்மா"...என்க...
"ச்சீ என்ன இனி அம்மானு கூப்டாத. என்கிட்ட பேசாத.சின்ன வயசுலருந்தே அவள யாரும் அடிச்சதிள்ள.எங்கண்ணா அவள பூமாதிரி வளத்து வச்சிருக்காரு. நீ என்னனா ஆஊனா அவள திட்ற இப்ப கை நீட்ற. அவ முகத்த பாருடா எப்படி சிவந்து போய் இருக்குனு,.காயம் வேற. "என்றபடி அவளது காயத்தில் கை வைத்தவர் ...
YOU ARE READING
இரவா பகலா
Randomகாரசாரமான காதல் கதை உங்களோட ஆதரவிற்கு நன்றி தோழமைகளே! ஆனா கதை சுமாரா இருந்தா என்ன திட்டாதிங்கோ