1

23.3K 366 287
                                    

hipa எல்லாருக்கும் வணக்கம் .என்னடா இவ யாரு திடீர்னு நமக்கு வணக்கம் சொல்றாளேனு பாக்குறீங்களா ??என் பேரு சைந்தவி.என்ன பத்தி சொல்லனும்னா நா சரியான வாயாடி ,அப்பா ,அம்மா,தம்பி தான் என்னோட உலகம் என்ன தான் சண்டை போட்டுக்கிட்டாலும் எனக்கு அவன் மேலயும் அவனுக்கு என் மேலயும் பாசம் ரொம்ப அதிகம்.
அதை தாண்டி எனக்குன்னு இருக்குற ஒரு உலகம்னா அது என் friends தான் .என்னோட lifela என்னோட எல்லா நேரத்துலயும் என் கூட இருந்தவுங்க  என் friends அண்ட் என் பேமிலி தான். அழுகையோ சந்தோஷமோ எனக்குன்னு இருக்க இவுங்க கிட்ட தான் நான் ஷேர் பண்ணிக்குவேன் .இப்டி தெளிஞ்ச நீரோடை மாதிரி அமைதியா போய்டகிட்டு இருந்த என் வாழ்க்கைல எந்த கஷ்டமும் வந்ததில்லன்னு நா நெனச்சுட்டு இருந்தப்போ தான் என் வாழ்கையவே மாத்துற மாதிரி ஒரு சம்பவம் நடந்துச்சு .

நான் மருத்துவம் 4 ஆம் ஆண்டு படுச்சுட்டுருந்தேன் .

காலைல என் வீட்டுல :

"அம்மாஆஆ டைம் ஆச்சுமா இன்னும் எனக்கு டிபன் பண்ணாம அந்த தடியனுக்கு shirt ஐயன் பண்ணிட்டு இருக்க டிபன் கொண்டு வா மா "

என்று சைந்தவி உச்சஸ்தானியில் கத்த அவள் தம்பி ஹரி விக்னேஷ் அவள் தலையில் கொட்டியவன் "யாரு தடிமாடு நானா? ஹே பூசணிக்கா முதல்ல போய் கண்ணாடியை பாருடி நல்லா hospitallah வைக்குற oxygen சிலிண்டர் மாறி இருந்துட்டு நீ எல்லாம் பேசுறியா" என்று சிரிக்க

அவளோ அவனை முறைத்துவிட்டு செய்தித் தாளை புரட்டிக் கொண்டிருந்த தன் தந்தையிடம் திரும்பியவள் "அப்பா அவன் என்ன oxygen cylinderனு சொல்லிட்டு இருக்கான் நீங்க என்னனா ஹாயா ஒக்காந்து பேப்பர் படுச்சுட்டு இருக்கீங்க என்னனு கேளுங்கப்பா"என்க

அவரோ அதை காதிலேயே வாங்கி கொள்ளாமல் "ஏன்மா ராஜி இன்னைக்கு இடி மழையுடன் கூடிய மழை பெய்யும்னு பேப்பர்ல போட்ருக்காங்களே அறிகுறி நம்ம வீட்டிலேயே ஆரம்பிச்சுருச்சு போல "என்க

அதற்கு அவள் தம்பியோ "அப்பா நல்லா பாருங்க நிலநடுக்கமும் சேந்து வருதுன்னு போட்ருக்காங்களானு "என்று அவள் டங்கு டங்கென்று நடப்பதை பார்த்து கொண்டே கூற

தாலாட்டும் சங்கீதம்(முடிவுற்றது)Where stories live. Discover now