அவன் கூறியது போலவே அங்குள்ள ஒரு கேந்திரிய வித்யாலயா பள்ளியில் இருவரும் சேர்ந்தனர் .அதிதி அவனை விட்டு நகரமாட்டாள் என்பதால் hostelலில் தங்காமல் சாரு அவள் பேரில் வாங்கி இருந்த வீட்டில் தங்கினர் .வாசுகி அவர்களின் வீட்டிற்கு பக்கத்துக்கு வீட்டிற்கு மாறி போனால் .அவள் உணவு மட்டும் சமைத்து கொடுப்பதோடு சரி அதிதியை எழுப்புவது முதல் அவளுக்கு சாரு தலை பின்னுவதை பார்த்து வைத்திருந்தவன் அவளுக்கு தலை பின்னுவது ,பாடம் சொல்லி கொடுப்பது ,கதை வாசிப்பது ,உணவூட்டுவது ,உறங்க வைப்பது என்று அவளுக்கு ஓர் அன்னையாகவே மாறி போனான் வித்யுத் .
அதிதியை சாரு விருப்பப்பட்டது போலவே தைரியமாய் வளர்க்க முற்பட்டவன் அவளுக்கு நீதி கதைகளையும் வீர பெண்களின் சரித்திரத்தையும் கற்று கொடுத்தவன் அவனுக்கு football பயிற்சி கொடுக்கும் இடத்திலேயே அவளுக்கு கராத்தே பயிற்சியை ஏற்பாடு செய்தான் அவளுடன் தானும் கற்றான் .அதிதி எதையும் எதிர்க்கும் வலிமையுடன் பெண்ணின் உருவிலும் ஆணின் தைரியத்துடனும் வளர்ந்தால் அவளுக்கு வயது 14ஆகும் பொழுது அவளிடம் அனைத்து உண்மையையும் கூறினான் அவன் அப்பொழுது வாசுகியின் கணவனுக்கு வெளிநாட்டில் வேலை உயர்வு வர மனமே இல்லாமல் அவர்களை விட்டு விட்டு சென்றால்.
அவன் football மிகவும் திறமையாக விளையாட நேஷனல் லெவல் ப்லயேரானான் அவனிற்கு ஆதலால் படிப்பு செலவு ஒன்றும் இல்லை அனைத்தையும் அவன் பள்ளியே ஏற்று கொண்டது.12thil நல்ல மதிப்பெண் எடுத்தவன் அய்ய்ம்ஸ் தேர்வு எழுதி அம்மாநிலத்திலேயே முதல் மாணவனாய் தேர்ச்சி பெற்றவன் மருத்துவம் படிக்க துவங்கினான் . 18 வயதானதும் அவளின் guardianaaga அவன் மாறினான் .
அவள் 14 வயதில் வயதிற்கு வர அன்று தன் அன்னையை நினைத்து மிகவும் வருந்தினான் .அவன் கண்ணீரை துடைத்த அதிதி தானாய் தோழிகளிடம் இருந்து அறிந்ததை வைத்து அவனிடம் தேவை ஆனதை வாங்க கூறியவள் அவளே அனைத்தையும் பார்த்து கொண்டால் .அண்ணனும் தங்கையும் ஒருவர் அன்றி இன்னொருவர் இல்லை எனும் நிலையில் வளர்ந்தனர்.
YOU ARE READING
தாலாட்டும் சங்கீதம்(முடிவுற்றது)
Non-Fiction💖💘💘💔💓அன்பிற்காக ஏங்கும் அவன் அன்பே வடிவமாய் இவள் .உலைக்களமாய் இருக்கும் அவன் நெஞ்சில் தாலாட்டும் சங்கீதமாய் அவள் வந்த kadhai.