அதிதிக்கு அவன் கையின் வருடல் பழக்க பட்டதை போல் இருக்க அன்று அவன் குரலும் பழக்க பட்டதை போல் இருந்ததை அவள் எங்கே என்று யோசிக்கும் போது அவள் நெற்றியில் ஒரு மழைத்துளி விழ தன் நெற்றியை வருடியவளுக்கு அன்று அவளுக்கு நெற்றியில் முத்தம் கொடுத்தவனின் ஞாபகம் வர அது இவன் தான் என்று இன்று அறிந்து
கொண்டால் .அவளுக்கு கோபம் வரவில்லை காரணமின்றி உதட்டில் ஏனோ புன்னகை விரிந்தது .அவனோ அவள் புன்னகையின் அர்த்தத்தை உணராது அவள் தோளை தொட்டவன் "ஹே அதி என்ன சிரிக்குற ?"என்க
அவளோ மனதில் "மவனே kiss பண்ணிட்டு எதுவும் தெரியாத மாறி இவ்ளோ நாலா இருந்துருக்கு நீ உன்ன..... ஆஹான் இப்போ காமிச்சுக்க கூடாது உன்ன கவனிக்க வேண்டிய நேரத்துல கவனிச்சுக்குறேன் பிராடு "என்று
நினைத்தவள் அவனிடம் "ஒன்னும் இல்லடா மழை வருதுல அதான் குஷி ஆயிட்டேன் "என்க
அவனோ "நா தான் அப்போவே சொன்னேன்ல ஐஸ் கிரீம் வேண்டாம்னு இப்போ பாரு மழை வந்துருச்சு நாளைக்கு ஏதாச்சும் காச்சல் அடிக்குது தல வலிக்குதுன்னு சொல்லு அப்டியே உன்ன "என்று அவள் கழுத்திற்கு கையை கொண்டு செல்ல
அவளோ "ஹலோ அதெல்லாம் நா ஸ்ட்ரோங் பாடி ஒன்னும் ஆகாது "என்று கையை மடக்கி இல்லாத அர்ம்ஸை காட்ட அடுத்த நிமிடம் "ஹச்சு" என்று அவள் தும்ம
அவனோ "ஆங் ட்ரைலர் ஸ்டார்ட் ஆயிருச்சு இனி nightuh மெயின் picture தெருஞ்சுரும் "என்க அவள் "ஈஈ" என்று பல்லை காட்டி இளிக்க மழையும் வெளுத்து வாங்க ஆரம்பித்ததை பார்த்தவன் இனி என்ன செய்வது என்று யோசிக்க அவனிடமோ ஒரு ஜெர்கின் இருந்தது.
அவள் அடுத்தடுத்து தும்முவதை பார்த்தவன் சடாலென்று அவள் கையை பிடித்து அருகிழுத்தவன் அவள் "ஹே ஹரி என்ன...."என்க அவனோ அவளை பார்த்து "ஷ்ஷ்ஷ் "என்று அவள் இதழில் தன் விரலை வைத்து "அதி மழை செமயா பெய்யுது உனக்கு தும்ம வேற செய்யுது எனக்கும் மழை ஒத்துக்காது சோ இந்த ஜெர்கின தலைக்கு மேல போட்டுக்கலாம் ரெண்டு பேரும் தள்ளிட்டு போயிரலாம் cycleah கொஞ்சம் தூரம் தான "என்க அவளுக்கு அவன் பேசிய எதுவும் காதில் விழவில்லை அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தாள் .
YOU ARE READING
தாலாட்டும் சங்கீதம்(முடிவுற்றது)
Non-Fiction💖💘💘💔💓அன்பிற்காக ஏங்கும் அவன் அன்பே வடிவமாய் இவள் .உலைக்களமாய் இருக்கும் அவன் நெஞ்சில் தாலாட்டும் சங்கீதமாய் அவள் வந்த kadhai.