13

6K 254 48
                                    

என் அம்மா பேரு சாரு சாரு மதி என்று தன் அன்னையின் கதையை கூற துவங்கினான் வித்யுத்

23 வருடங்களுக்கு முன்னாள்

அதே பிரம்மாண்டமான வீடு கதவிலிருந்து உள்ளே செல்லும் வழியின் இரண்டு பக்கமும் புல்வெளியுடன் கூடிய தோட்டம் அமைந்திருக்க அந்த காலை வேளையில் அந்த மரத்தில் இருந்த குயில்களின் சத்தமும் சூரியனின் செங்கதிர்களும் ஜன்னலின் வழி அவ்வறையின் உள் நுழைய மெல்ல துயில் களைந்து எழுந்தாள் 23 வயதான சாருமதி.

எழுந்தவள் தனக்கு நேர் எதிரே இருந்த தன் அன்னையின் புகைப்படத்தை பார்த்து "குட் மார்னிங் மா " என்றவள் குளித்து முடித்து சுடிதார் அணிந்து கொண்டு கீழே இறங்கி வர அங்கே இருந்த சாப்பாடு மேஜையில் அமர்ந்திருந்தார் அவரின் தந்தை விஜயராகவர்.நேரே வந்தவர் அவரின் தந்தையின் கழுத்தை கட்டி கொண்டு "குட் மோர்னிங் பா "என்க

அவரும் புன்னகைத்து கொண்டே " குட் மோர்னிங் டா சாரு.இன்னைக்கு meetingku ப்ரெசென்ட்டேஷன் ரெடி பண்ணிட்டியா டா "என்று கேட்டு கொண்டே இருக்க அவருக்கு எதிர் இருக்கையில்

அமர்ந்தவள்" அதெல்லாம் முடுச்சுட்டேன்பா இன்னைக்கு ஆர்டர் நமக்கு தான் "என்றால் .இவர்களை பற்றி ஒரு சிறு அறிமுகம் சாருமதி விஜயராகவர் சாரதாவின் ஒரே புதல்வி சாரதா பிரசவத்தில் இறந்து விட தன் வாழ்க்கைக்கு வேறு துணையை தேடாமல் தன் வாழ்வே தனது மகளுக்கு என்று வாழ்பவர் விஜயராகவன் .சாருமதி பொறியியல் முடித்து விட்டு இப்பொழுது 2 வருடங்களாக தன் தந்தையின் தொழில்களை அவருடன் இணைந்து பார்த்து வருகிறார்.குணத்தில் குறும்புத்தனமும்,சிறுபிள்ளை தனமும் இருந்தாலும் வேலை நேரத்தில் பெண் சிங்கம் போன்றதொரு தோரணை இருக்கும் .அனைத்தையும் மிகவும் சாமர்தியமாகவும் சாதூர்யமாகவும் ஒரு ஆண் பிள்ளைக்கு இணையாய் தொழிலை நடத்தும் திறமை உடையவர் .மகளை நினைத்து அவருக்கு என்றும் ஒரு பெருமை இருந்தாலும் அவளை இதே போல் என்றும் கண் கலங்காமல் பார்த்து கொள்ளும் ஒரு மருமகனை வேண்டியது அந்த தந்தையின் உள்ளம் .

தாலாட்டும் சங்கீதம்(முடிவுற்றது)Where stories live. Discover now