11

6K 262 57
                                    

அவன் கூறுவதை கேட்டவளுக்கு பேச்சு வரவில்லை .மழை கொட்டுவதை உணரும் நிலையிலும் அவள் இல்லை உறைந்தார் போன்று அப்படியே நின்றுவிட்டால்.அவன் தோளை தொட்டதும் தான் சுய உணர்வை அடைந்தாள்.

அவளுக்கு அவன் மீது கோபமும் வரவில்லை இது வரை எத்தனையோ பேரிடம் இல்லை என்று கூறியவளால் அவனிடம் இல்லை என்றும் கூற முடியவில்லை .எதுவும் பேசாதவள் விறுவிறுவென scooty உடன் நடக்க சிறிது தூரத்தில் அவளது scooty puncture ஆனது .அவள் பின்னோடே வந்தவன் அவள் scooty puncture ஆகி என்ன செய்வதென்று தெரியாமல் காலின் கீழே இருந்த தண்ணீரை எத்தி கொண்டிருந்தவளை பார்த்தவனுக்கு இதழில் புன் முறுவல் பூக்க அவள் அருகே சென்று வண்டியை நிறுத்தியவன் ஹா ரணை அடிக்க அவளோ அவனை பார்த்து பின் சடாலென்று தலையை குனிந்து கொண்டாள்.

அவள் கையை பின்னி பிசைந்து கொண்டிருக்க அவள் பதட்டமாய் இருப்பதை உணர்ந்தவன் அவளை சகஜமாக்கும் பொருட்டு "வீட்டுக்கு போகனும்னு ஐடியா இருக்குறவுங்க வந்து ஏறலாம் "என்க

அவளோ "எங்களுக்கு போய்க்க தெரியும் என்று விட்டு அங்கு இருந்த பேருந்து நிறுத்தத்தில் போய் நிற்க

அவனும் ஓகே என்று விட்டு சென்று விட்டான் .அதற்கும் அவனையே வறுத்தெடுத்தாள் சைந்தவி .

சைந்தவிக்கு இருட்டென்றாலும் இடி சத்தம் என்றாலும் சிறுவயதிலிருந்தே மிகுந்த பயம். இப்பொழுது பெய்த மழையில் மாலை நேரமும் இரவை போல் இருந்து விட சற்று நேரத்தில் வெட்டிய மின்னலில் சாலை ஓரத்தில் எறிந்த விளக்குகளும் அணைந்துவிட்டது .

கணேஷா கணேஷா என்று முனங்கியவள் பின் இடி சத்தத்தில் மேலும் பயந்து போனால். சற்று நேரத்தில் அவள் அருகில் வித்யுத் வந்து நிற்க அவனை அந்த பைக் வெளிச்சத்தில் தீயென முறைத்தவள் வீம்பாய் அந்த இடத்திலேயே நின்றாள் .பின் கேட்ட இடி சத்தத்தில் கெத்தாவது ஒண்ணாவது என்றுவேக  வேகமாய்  அவள் scootyai பூட்டியவள் ஆட்டோமெட்டிக்காக அவன் வண்டியில் பின்னே அமர்ந்து அவன் தோளில் கை வைத்து அவன் bikeil பின்னேஅமர்ந்து கொண்டாள் உடல்நடுக்கத்துடன் .

தாலாட்டும் சங்கீதம்(முடிவுற்றது)Where stories live. Discover now