பூஜா "ஷொபா இவனுங்கள சமாளிக்குறதுக்குள்ள ஒரு ஜுராசிக் parkaye சமாளிச்சிறலாம் போலடா"என்க
சைந்தவியோ "ஒழுங்கா பேசிருந்தாலே அவன் விட்ருப்பான் சொதப்பிட்டு நாயே dialogueaah அடிக்குற வந்து தொள.என்றவள் அந்த பூங்காவிற்கு சென்றால்.பூஜாவிடம் "நீ இங்க வெயிட் பண்ணுடி நா பாத்துட்டு வந்துருறேன் "என்றவள் உள்ளே சென்றால்.
அங்கே ஒரு பெஞ்சில் இவளின் வருகைக்காக விஷ்வா காத்திருந்தான்.அங்கே சென்றவள் "என்ன ஏதோ பேசணும்னு சொன்னீங்க அங்கிள் ."என்க
அவனோ அவளை எதிர் இருந்த பெஞ்சை காட்டி "உக்காந்துட்டு பேசலாமாமா"என்க அவளும் சென்று அமர சிறிது நேரம் மௌனமாய் இருந்தவன் திடீரென்று இரு கையையும் கூப்பி "அன்னைக்கு அவ பேசுனதுக்கு மன்னிச்சுருமா "என்க அத்தனை வயதுள்ள ஒருவர் தன் முன் கை கூப்பி இருப்பதை பார்த்தவள் பதறி அவர் கையை பிடித்தவள் "ஹையோ அங்கிள் என்ன நீங்க என் அப்பா வயசிருக்கும் உங்களுக்கு நீங்க போய் என் முன்னாடி கை கூப்பிக்கிட்டு இறக்குங்க அங்கிள்.அவுங்க பேசுனதுக்கு நீங்க என்ன பண்ணுவீங்க "என்க
அவனோ "பண்ணக்கூடிய பாவத்தை எல்லாம் ஏற்கனவே பண்ணிட்டேன்மா அதான் எல்லாத்தையும் இழந்து நிக்கிறேன் .இனிமே நா இழக்க எதுவும் இல்ல ஆனா என் புள்ளைங்க நல்லா இருக்கனும்.என் பையன் அவன் அம்மா செத்தப்றோம் சிரிச்சே நா பாத்ததில்லமா நீ வந்ததுகப்புறோம் தான் அவன் முகத்துல சிரிப்ப நா பாக்குறேன் "என்க
அவளோ "நீங்க எங்க அங்கிள் உங்க பையன பாத்தீங்க பெத்த பையனையும் பொண்ணையும் எக்கேடோ கேட்டு போங்கன்னு விட்டுட்டு ஆண்ட்டிக்கு காரியம் பண்றதுக்குள்ள கல்யாணம் தான பண்ணீங்க "என்று ஆதங்கமாய் கேட்க
ஒரு வறட்டு புன்னகை செய்தவன் "கல்யாணம் மட்டும் தான்மா பண்ணேன் .அவன் முன்னால் போய் பார்க்கல but I was watching them from distance"என்க
அவளோ புரியாமல் "புரியல" என்க
அவனோ சாரு இறந்ததற்கு பின் ரம்யா பேசிய அனைத்தையும் கூறினான் அவன் அனைத்தையும் கூறினாலும் அவளுக்கு இவனை நம்பவா வேண்டாமா என்று சஞ்சலம் இருக்க அவள் தெளிவுறாத முகத்தை பார்த்தவன் "என்னடா இவனை எப்படி நம்புறதுனு யோசிக்கிறியாமா நீ யோசிக்கிறது சரி தான் ஆனா நா சொல்றது முழுக்க முழுக்க உண்மை "என்க
YOU ARE READING
தாலாட்டும் சங்கீதம்(முடிவுற்றது)
Non-Fiction💖💘💘💔💓அன்பிற்காக ஏங்கும் அவன் அன்பே வடிவமாய் இவள் .உலைக்களமாய் இருக்கும் அவன் நெஞ்சில் தாலாட்டும் சங்கீதமாய் அவள் வந்த kadhai.