அவன் வெற்றி பெற்ற சந்தோஷத்தில் கத்திகொண்டே எம்பி குதித்தவன் சைந்தவியை தேட அவள் மயங்கி சரிவதை கண்டவன் "சதுஉஉ"என்ற கூவலுடன் அவள் இருக்குமிடம் நோக்கி ஓடினான்.
அதற்குள் அவளை சுற்றி மாணவர்கள் சூழ்ந்து விட அவர்களை விளக்கியவன் .அவள் தலையை தன் மடியில் ஏந்தியவன் "சது சது என்னாச்சுடி பாரு"என்றவன் சுற்றி நின்றவர்களை விலகுமாறு கூறி காற்றுக்கு வழி விட செய்தான்.
பின் அவள் முகத்தில் தண்ணீர் தெளிக்க அப்பொழுதும் அவள் எழுந்திருப்பதாய் இல்லை .பின் இனியும் தாமதிக்க கூடாது என்றெண்ணியவன் அவளை தன் இருக்கைகளில் ஏந்திக்கொண்டு தங்கள் கல்லூரியுடன் இணைந்திருக்கும் மருத்துவமனைக்கு அவளை தூக்கி கொண்டு ஓடினான்.
அங்கே அவசர பிரிவில் அவளை அனுமதித்தவனின் சிந்தனையில் ஓடியது ஒன்று மட்டுமே "என் சதுக்கு எதுவும் ஆக கூடாது "அந்த நிமிடம் அவன் சற்று நேரத்திற்கு முன் ஈட்டிய வெற்றியோ ,இல்லை இது மயக்கம் தான் அவள் எப்படியும் மீண்டு விடுவாள் என்ற எண்ணமோ அவனுக்கு துளியும் இல்லை அவன் மனதில் இருந்த ஒரே எண்ணம் சைந்தவி.அவனுக்கு மற்ற நண்பர்களிடம் கூற வேண்டும் என்பது கூட தோன்றவில்லை அவ்வழியே எதற்கோ வந்த சரன்னும் ஷ்ரவனும் வித்யுத் அங்கே பதட்டமாக நிற்பதை பார்த்தவர்கள் செவிலியரிடம் விசாரித்தவர்கள் சைந்தவியை பற்றி அறிய அவன் அருகில் சென்று "மச்சி என்னாச்சுடா சையுக்கு" என்று அவனை உலுக்க அவனோ சுரணை அற்றவனாய் அந்த அறை வாசலையே நோக்கி கொண்டிருந்தான் .
சற்று நேரம் கழித்து வெளியே வந்த மருத்துவரிடம் வேக வேகமாக ஓடியவன்"டாக்டர் என் சைந்தவிக்கு ஒன்னும் இல்லேல .நல்லா தான் இருந்தார் திடீர்னு மயங்கிடா நா என்னென்னவோ பண்ணேன் அவ எந்திரிக்கவே இல்ல அவளுக்கு ஒன்னும் இல்லேல .அவளுக்கு எதுவும்னா என்னால தாங்க முடியாது "என்று அவன் போக்கிற்கு பிதற்ற சரணிற்கும் ஷ்ரவனிற்கும் எதற்கும் கடுமையாய் கலங்காமல் இருக்கும் வித்யுத் சாதாரண மயக்கத்திற்கு இப்படி பயப்படுவதை பார்க்க வினோதமான இருந்தது .
YOU ARE READING
தாலாட்டும் சங்கீதம்(முடிவுற்றது)
Non-Fiction💖💘💘💔💓அன்பிற்காக ஏங்கும் அவன் அன்பே வடிவமாய் இவள் .உலைக்களமாய் இருக்கும் அவன் நெஞ்சில் தாலாட்டும் சங்கீதமாய் அவள் வந்த kadhai.