தன்னுள் எழுந்த உணர்வை தன்னுள்ளேயே புதைத்தவன் உறங்க அடுத்த நாள் காலை விடிந்தது .அன்று அவர்கள் கல்லூரி விளையாட்டு விழா ஆரம்பமானது .முதல் அணி இவர்களும் இன்னொரு பொறியியல் கல்லூரியும் மோதினர் .இவர்கள் 3 goals அடித்து விட அவர்களோ கல்லாவே திறக்காமல் ௦ goalsil ஆட்டம் முடிவடைந்தது .
அடுத்தடுத்து இவர்களே அபாரமாக விளையாட இறுதி சுற்றிற்கு தேர்வாயினர் .இறுதி சுற்றிற்கு தேர்வான இன்னொரு கல்லூரியோ ஒரு கலை கல்லூரி .
அந்த அணியின் தலைவனின் பெயர் வினை .பெயரிர்க்கெட்டாற்போல் அவன் செல்லும் இடங்களிலெல்லாம் இவன் பெரும் வினையாகவே இருப்பான் .தான் செல்லும் அனைத்து போட்டிகளிலும் தன் அணியை ஜெயிக்க வைப்பவன் .
திறமையால் பல வெற்றியும் சூழ்ச்சியால் பல வெற்றியும் அடைந்தவன் .இவர்களின் ஆட்டத்தை பார்த்து கொண்டிருந்தான் .தனக்கு அருகில் இருந்த தனது நண்பன் சிவாவை அழைத்தவன் வித்யுத்தை சுட்டி காட்டி "யார்டா இவன் இதுக்கு முன்னாடி இந்த காலேஜ்ல பாத்ததில்லையே பாஸ்ட் 3 yearsaah இவனுங்க பிளாப் டீமாச்சேடா finals வரைக்கும் செலக்ட் ஆய்ருக்கானுங்க இந்த தடவ யாரவன் ?"என்று கேட்க
ஷிவாவோ "மச்சி நானும் கவனிச்சேன்டா அதான் பையன்னஹ் பத்தி விசாரிச்சேன் பேரு வித்யுத் இந்த வருஷம் தான் சேந்துருக்கான் இந்த காலேஜ்ல 4aavadhu வருஷம் .நேஷனல் லெவல் புட்பால் playeraam நேஷனல் புட்பால் டீம் அண்டர் 21ku 1 வருஷம் முன்னாடி கேப்டனாக இருந்துருக்கான் அந்த டீம் தான் ஜெயிச்சுச்சு செம talented " என்று கூற வினய் மனதிற்குள் அவனை திறமையால் வீழ்த்த முடியாவிடில் அவனை சூழ்ச்சியால் தான் வீழ்த்த வேண்டும் என்று முடிவெடுத்தவன் அங்கும் இங்கும் தன் கண்ணை சுழலவிட்டவன் கண்களில் பட்டது விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் பழரசம்.
அதை கண்டவன் மனதில் ஒரு எண்ணம் தோன்ற விஷம சிரிப்பு சிரித்தவன் சிவாவை அழைத்து தன் திட்டத்தை கூறினான் பின் இருவரும் தங்கள் திட்டத்தை நிறைவேற்ற சென்றனர் .இங்கே ஆடி ஆடி களைத்து வந்த வித்யுதிற்கு உணவுடன் காத்திருந்தாள் சைந்தவி .நாளை கலை நிகழ்ச்சி ஆரம்பமாக இருப்பதால் மற்ற நான்கு நண்பர்களும் தாங்கள் பெயர் கொடுத்திருக்கும் போட்டிகளிற்காக பயிற்சி எடுக்க சென்று விட வித்யுத் செய்த வேலை அறியாத சைந்தவி தான் எதிலும் இல்லை என்று நினைத்து கொண்டிருந்தவள் அவனுக்காக காத்திருந்தாள் .வேர்க்க விறுவிறுக்க வந்தவனிடம் துண்டை கொடுத்தவள் அவன் துடைத்த பின் அவனுக்கும் சேர்த்து தான் கொண்டு வந்திருக்கும் சாப்பாட்டை கொடுத்தால்.
YOU ARE READING
தாலாட்டும் சங்கீதம்(முடிவுற்றது)
Non-Fiction💖💘💘💔💓அன்பிற்காக ஏங்கும் அவன் அன்பே வடிவமாய் இவள் .உலைக்களமாய் இருக்கும் அவன் நெஞ்சில் தாலாட்டும் சங்கீதமாய் அவள் வந்த kadhai.