நான் தான் என்று குரல் வர அங்கு திரும்பி பார்க்கவோ ரம்யா நின்றிருந்தாள் .அவளை பார்த்து வினய் விழிக்க விக்ரம் "இது ரம்யா இவங்க அதிதியோட அப்பாவோட செகண்ட் wife இவுங்க தான் நமக்கு ஹெல்ப் பண்ணிட்ருக்காங்க "என்க
அவளோ "விக்ரம் சொன்னான்ப்பா உன்ன பத்தி வித்யுத்......என்னையே ஒரு தடவ அடிக்க கை ஓங்கிருக்கான் அவனை சும்மா விட கூடாது .உனக்கும் நா ஹெல்ப் பண்றேன் "என்க
வினையோ "நீங்களா நீங்க எப்படி எங்களுக்கு ஹெல்ப் பண்ண முடியும்" என்று அலட்சியமாய் கேட்க
ரம்யாவோ "உருவத்தை பார்த்து எடை போடாத வினய்.என்றவள் அவள் செய்த ஆள கால சாகசங்களை எல்லாம் கூறினால் .இவ்ளோ என் ஆதித்திய புடுச்சுருக்குனு விக்ரம் வந்து சொன்னப்போ விஷ்வாவை மிரட்ட சொன்னதும் அவன் பணியலென்ன ஒடனே ஆதித்திய accident பண்ண சொன்னதும் நான் தான் "என்றவள் அவன் முகத்தை பார்க்க அவனுக்கோ முகத்தில் ஈ ஆட வில்லை .
பின் அவளை பார்த்து சிரித்தவன் "அப்போ சரி டீல் ஆனா இதுனால உங்களுக்கு என்ன கிடைக்கும் ?"என்க
அவளோ சிரித்து விட்டு "சிம்பிள் சொத்து கிடைக்கும் .ஆதித்திய விக்ரம் கல்யாணம் பண்ணி கிட்டா அவ பங்கு சொத்தை எனக்கு மாற்றி தறதா விக்ரம் சொல்லிட்டான் .சைந்தவி மேல வித்யுத் உயிரையே வச்சிருக்கான் அவ இல்லாத lifeah அவனால நெனச்சு கூட பாக்க முடியாது .இப்போ அவளை நீ கல்யாணம் பண்ணிக்கிட்டா அவனும் இறந்துருவான் obviously அந்த பங்கு சொத்தும் அதிதிக்கு வந்து சேரும் அது திரும்ப எனக்கு வந்து சேரும் .என்றவள் பின் மொத்த சொத்தும் என் கைக்கு வந்துட்டா அப்பறோம் "என்றவள் பயங்கரமாய் சிரிக்க வினையும் விக்ரமும் அவளுடன் சேர்ந்து சிரித்தனர் (அவ சிரிக்குறா அதுல ஒரு லாஜிக் இருக்கு நீங்க எதுக்குடா சிறிக்குறீங்க.வில்லனாமாம்)
அப்பொழுது விக்ரம் அனுப்பி வைத்த ஆள் வர விக்ரம் "ஹே வா வா வா உனக்காக தான் காத்துட்டு இருந்தேன் "என்றவன் அவன் தோளில் கை போட அவனோ "ச சார் அதிதி madammoda ஒரு பையன் ஹரி எப்போவும் சொல்லிருக்கேன்ல என்றவன் அடுத்து நடந்தவையையும் இன்று அவன் கண்ட காட்சியையும் கூறியவன் விக்ரமின் முகத்தை பார்க்க அதுவோ தீப் பிழம்பின் நிறத்தில் இருந்தது .
YOU ARE READING
தாலாட்டும் சங்கீதம்(முடிவுற்றது)
Non-Fiction💖💘💘💔💓அன்பிற்காக ஏங்கும் அவன் அன்பே வடிவமாய் இவள் .உலைக்களமாய் இருக்கும் அவன் நெஞ்சில் தாலாட்டும் சங்கீதமாய் அவள் வந்த kadhai.