23

5.2K 234 39
                                    

பின் அடுத்த நாள் கல்லூரிக்கு வித்யுத்தும் சைந்தவியும் செல்ல அவர்கள் செல்வதை ஒரு ஜோடி கண்கள் பார்த்து கொண்டிருந்தது .

1 வாரம் சென்ற நிலையில் அதிதி எழுந்து நடக்க ஆரம்பித்திருந்தாள் .ஹரிக்கும் அந்த ஒரு வாரம் ஸ்டடி ஹாலிடேயாக இருந்ததால் காலையில் அங்கே வித்யுத் சென்றதும் வரும் அதிதி மாலையில் வித்யுத் வந்த பின்பே வீட்டிற்கு செல்வாள் .

இந்நிலையில் அவளுக்கும் ஹரிக்கும் நல்ல ஒரு நட்பு உருவாகி இருந்தது .சேர்ந்து படிப்பதும் பேசுவதும் வரைவதும் என்று நேரத்தை செலவிட்டனர்.ஹரிக்கு முதலில் அவள் மேல் இருந்த ஈர்ப்பு நட்பிற்கானது என்று இம்முறையும் சரியாய் தப்பாக புரிந்து கொண்டு அவளுடன் ஒரு நண்பனாய் பழக துவங்கினான்.

மேலும் 2 நாட்கள் சென்ற நிலையில் ஆதிதிக்கும் வித்யுத்திற்கும் வீட்டில் பெரிய வாக்கு வாதமே நடந்து கொண்டிருந்தது .

வித்யுத் "அதிதி நீ என்ன சொன்னாலும் நீ சொல்றதுக்கு நா என்னைக்கும் ஒத்துக்கவே மாட்டேன் "என்க

அவளோ "நா என்ன அப்டி தப்பா கேட்டுட்டேன் எல்லாரும் கேக்குறத தான நா கேட்டேன் இதுல என்ன தப்பிருக்குங்கிற ?"என்க

அவனோ"நாட்டுல நெலம எப்படி இருக்குனு தெரிஞ்சு தான் பேசுறியா அவன் அவன் பொம்பள புள்ளைங்க வெளிய போய்ட்டு வீட்டுக்கு வர வரைக்கும் டென்ஷன்ல பிபி patient ஆய்ட்ருக்கான் நீ என்னனா coollaah இங்க இருந்து 5 கிலோமீட்டர் தூரத்துல இருக்குற கோச்சிங் கிளாஸ்க்கு cyclela போயிட்டு வர்றேங்குற "என்க

அவளோ "நீ தான என்ன எப்போவும் தைரியமா இருக்கனும் எதையும் face பண்ணனும்னு சொன்ன இப்போ வரைக்கும் உன் பாதுகாப்புலயே வச்சுருந்தேனா எப்படி நா அடுத்து என் lifeah பாத்துக்குறது ?"என்க

அங்கு வந்த சைந்தவியும் ஹரியும் "என்ன நடக்குதிங்க?" என்க

அதிதி "பாருங்கண்ணி இந்த அண்ணனை இங்க இருக்குற கோச்சிங் கிளாஸ்க்கு cyclela போயிட்டு வரேண்டான்னு சென்னா நா தான் கூட்டிட்டு போவேன் அப்டினு ஒத்த காலுல நிக்குறான்.இவன் காலேஜ் எந்த பக்கம் இருக்கு? என் கோச்சிங் கிளாஸ் எந்த பக்கம் இருக்கு ?சொன்னா கேக்க மாடீங்கிறான் ."என்க

தாலாட்டும் சங்கீதம்(முடிவுற்றது)Where stories live. Discover now