32

6.6K 248 68
                                    

வேக வேகமாய் வெளியே வந்தவனின் காதில் அவள் அம்மாவின் அழுகுரல் கேட்க தன் காதை இருக்க மூடியவன் ஓட்டமுமாய் ஓட தன் வீட்டிற்குள் வந்தவன் தன் அறைக்குள் முடங்கி கொண்டான்.

அவன் கண்ணெதிரே சைந்தவியை பாட்டு போட்டியின் போது அவன் அவளை எடுத்த புகைப்படம் பெரிதாய் இருக்க அதன் அருகில் சென்று அதை வருடியவன் நினைவில் அவளை முதல் நாள் பார்த்தது,அவளுடன் விளையாடியது ,அவள் அடித்தது,அவனுக்காக மயக்கத்தை கட்டு படுத்தி கொண்டிருந்தது ,அவன் காதலை கூறிய நொடி அவனை பார்த்த பார்வை,அடுத்த நாள் ஒரு தாயாய் தன் மன பாரத்தை அவள் மடியில் இறக்கி வைத்து ,முதல் முத்தம் அவளின் கோபம்,சிரிப்பு,அவன் தலை களைத்து அவள் விளையாடுவது ,அவள் குரல்

அனைத்தும் அவன் கண்முன்னே வர அவன் காணும் இடம் யாவும் அவள் அவள் அவள் மட்டுமே .பைத்தியம் பிடிப்பதை போல் உணர்ந்தவன் சது......... என்று கத்தியவன் அந்த இடத்திலேயே மடிந்து அமர்ந்து அழுதான்.அழுதான் அழுதான் அழுது கொண்டே இருந்தான் ஆறுதலாய் அவன் சாய்ந்த மடி மண்ணுக்குள் போனதாய் நினைத்து அழுதான் .

அவள் புகைப்படம் அனைத்தையும் எடுத்து விரித்தவன் ஒவ்வொன்றாய் பார்த்து அழுதான்.தன்னை மறக்க எண்ணினான் அவளின் நினைவுகளிடம் இருந்து ஓட எண்ணினான் .அங்கிருந்த அனைத்து பொருட்களையும் எடுத்து கீழே போட்டுடைத்தான் திரைசீலையை இழுத்தான் கண்ணாடியை உடைத்தான் வெறி பிடித்தவனை போல் நடந்து கொண்டான்.

என்றோ ஒரு நாள் சரண் அவனிற்கு விளையாட்டிற்காய் வாங்கி கொடுத்த மது பானத்தின் நினைவு வர அதை தேடினான் தேடி எடுத்தான் ஒரே மூச்சில் உள்ளே சரிதான் மது பழக்கமே இல்லாதவன் மொத்தமாய் அதை ஒரே மூச்சில் குடித்தான் குடித்தவன் அப்படியே கீழே அவள் புகைப்படங்களுக்கு மத்தியில் விழுந்தான் .கண்கள் சொருக அவள் நினைவுகளிலிருந்து தப்ப நினைத்தவன் போதையின் பிடியில் தூக்கத்தை தழுவினான்.

அடுத்த நாள் யாரோ தன் முகத்தில் தண்ணீரை ஊற்றுவதை போல் இருக்க கண்களை கஷ்டப்பட்டு திறக்க முடியாமல் இருந்தவனின் செவியில் விழுந்த குரலை கேட்டவனால் நம்ப முடியவில்லை தான் கேட்கும் குரலை "லூசு லூசு அறிவு கெட்டவன் எப்படி போட்டு வச்சிருக்கான் பாரு ரூமஹ் இங்க பாரு கண்ணாடிலாம் உடைச்சு கொரங்கு கொரங்கு "என்ற குரல் அவனுடைய சைந்தவியுடையது கனவென்று நினைத்தவன் கனவாயினும் கலையாதிருக்க வேண்டி கண்களை இருக்க மூடினான் .

தாலாட்டும் சங்கீதம்(முடிவுற்றது)Where stories live. Discover now