இங்கே இவர்கள் யாரை ஒழிக்க திட்டம் தீட்டி கொண்டிருக்கிறார்களோ அவனோ மிகவும் கூலாக விசில் அடித்து கொண்டே ஒரு இடத்தில் காரை நிறுத்தி விட்டு அவன் மொபைலில் உள்ள அதிதியின் முகத்தை பார்த்தவன் நிலவை பார்த்து விட்டு "அந்த வானத்துல இருக்குற நிலவ விட நீ தான் அது என் மனசுல அணையாம ஜொலிக்குற உனக்கு ஞாபகம் இருக்கானு தெரில ஆனா எனக்கு ஞாபகம் இருக்கு நான் எப்போ உன்ன பாத்தேன்னு
(பிளஷ்பக் ஈஈஈஈ)
4 மாதங்களுக்கு முன்
இரவு 8 மணி
ஆள் நடமாட்டமில்லாத ஒரு சாலையில் ஒரு கார் நின்றுகொண்டிருந்தது அதன் வெளியே நான்கு இளவயது ஆண்கள் கையில் பாட்டிலுடன் நின்று கொண்டு ஏதோ உரையாடி கொண்டே போதையில் உழன்று கொண்டிருந்தனர்
அதில் ஒருவன் "டேய்ய் விக்ரம் செம டா காலேஜ் முடுச்சு கொஞ்ச நாள்லயே கம்பெனி எடுத்து நடத்த ஆரம்பிச்சுட்டியே என்ஜோய் பண்ண மாட்டியோ ற்றேஅட் குடுக்க மாட்டியோன்னு நெனச்சேன் எண்ஜோயோஹ் என்ஜோய்மேன்ட் மச்சான் "என்க
இன்னொருவன் "ஆனா ஒரே ஒரு கொர மச்சான்"என்க
விக்ரம் "என்னோட treatla கொறையா இருக்கவே கூடாதே என்னடா கொறையுது" என்று குளறி கொண்டே கேட்க அங்கே அவர்களை நோக்கி இரு பெண்கள் வந்து கொண்டிருந்ததை
பார்த்தவன் "கைல புட்டி இருக்கு ஒரு குட்டியும் இருந்தா நல்லா நச்சுனு இருக்கும்டா அதோ அந்த மாறி என்று அந்த இருவரில் ஒரு பெண்ணை நோக்கி கை காட்ட அங்கே பார்த்தவன் உண்மையிலேயே அசந்து தான் விட்டான் சாந்த சொரூபிணியாய் சிறிது பேசிக்கொண்டே இரு பெண்கள் வர அவனுக்கோ தன் நண்பன் காட்டிய பெண்ணுடன் வந்து கொண்டிருந்த இன்னொரு பெண்ணின் மீதே கண்கள் இருந்தது .அவர்கள் அருகில் வந்ததும் ஒருவன் காரில் இருந்து இறங்கி அந்த இன்னொரு பெண்ணிடம் சென்று அவள் கையை பிடிக்க அது வரை கண்கள் எடுக்காமல் அந்த பெண்ணை பார்த்து கொண்டிருந்த விக்ரம் ஒரு அடி சத்தத்தில் தான் சுய நிலைக்கே வந்தான் .
YOU ARE READING
தாலாட்டும் சங்கீதம்(முடிவுற்றது)
Non-Fiction💖💘💘💔💓அன்பிற்காக ஏங்கும் அவன் அன்பே வடிவமாய் இவள் .உலைக்களமாய் இருக்கும் அவன் நெஞ்சில் தாலாட்டும் சங்கீதமாய் அவள் வந்த kadhai.