அவன் மீண்டும் பாடத்தில் ஒன்றி போக நேரம் யாருக்கும் நிற்காமல் செல்ல இதோ பாடவேளை முடிந்து உணவுண்ணும் நேரமும் வந்தது .அவன் யாரிடமும் ஒன்றும் பேசவும் இல்லை அவளை மீண்டும் பார்க்கவுமில்லை .தன் பையை எடுத்தவன் கேன்டீனை நோக்கி புறப்பட்டான் .அவன் சென்றபின் சைந்தவி,பூஜா,வினிஷா அருகில் வந்தனர் ஷ்ரவனும்,சரணும்.
சரண் "செம திமிரடி அவனுக்கு .சரி புதுசா வந்துருக்கானே பேரென்னனு கேட்டா பதில் சொல்லல அடுத்து எந்த காலேஜ்ல இருந்து வந்துருக்கான்னு கேட்டா அதுக்கும் பதிலில்லை அப்பறோம் நானும் செர்தான் போடான்னு விட்டுட்டேன்"
என்க ஷ்ரவன்"ஆமாடி நானும் பார்த்தேன் pen கீழ விழுந்துருச்சுன்னு எடுத்து தாணு சொன்ன எடுத்து தந்தான் அப்பறோம் தேங்க்ஸ் சொன்னா ஒண்ணுமே ரிப்ளை பண்ணல சிரிச்சுட்டு திரும்பிட்டான்.ஒருவேளை ஊமையோ ?"
என்க பூஜா "அட மங்குனி அமைச்சர்களா கிளாஸ் நடந்துதிருக்கேல நம்ம நான்ஸ்டாப் வாயாடி சையுவே பேச மாட்டா இதுல அவனை பாத்தாலே reserved type மாறி இருக்கு இது போதாதுன்னு படிப்ஸ் வேற எப்பிடிடா ரிப்ளை பண்ணுவான்?"
என்க வினீஷா "என்ன பேபி ட்ராக் மாறுது போல rith என்கின்ற rithwikta போட்டு குடுத்துருவேன் பாத்துக்கோ .என்ன நாம இவ்ளோ டயலாக் பேசிட்டோம் நம்ம சையுவை ஆள காணோம் "என்று தேட
ஷ்ரவனோ"அவளும் பொறுத்து பொறுத்து பாத்தா நீங்க முடிக்குற மாறி இல்ல அதான் அவ சோறு தான் முக்கியம்னு கான்டீன் பக்கம் போய்ட்டா" என்றான் பின் அனைவரும் கிளம்பி தத்தம் காதலர்களை சந்திக்க சென்றனர்.எப்போதும் ஒன்றாக இருக்கும் இந்த நண்பர்கள் குழு உணவுண்ணும் வேளையில் மட்டும் தத்தம் காதலை சந்திக்க சென்று விடும்.
சைந்தவியுடன் அமர்ந்து உண்ண பலரும் தயாராக இருப்பதால் தினம் ஒரு குழுவினருடன் தன் உணவு நேரத்தை செலவிட்டு அவ்விடத்தையே கலகலப்பாக மாற்றி விடுவாள் .அன்றும் அவள் உள்ளே காண்டீனிற்குள் செல்ல அனைத்து இடங்களும் நிறைந்திருந்தது ஒரு இருக்கையை தவிர .அங்கே சென்று அமர்ந்தவள் எதிரில் அமர்ந்திருந்தான் அவன் .எதிரில் அமர்ந்திருந்தவள் அவனிடம் "ஹாய் " என்க அவனோ வேறு ஏதோ சிந்தனையில் இருந்தான்.பின் அவள் மீண்டும் "ஹலோ பாஸ் " என்க திடுக்கிட்டு சிந்தனையில் இருந்து விடு பட்டவன் என்னவென்று நோக்க அவள் "ஹாய் என்ன செம திங்கிங்க்ல இருக்க போல .என்ன லஞ்ச் கான்டீன் சாப்பாடு தானா" என்க
YOU ARE READING
தாலாட்டும் சங்கீதம்(முடிவுற்றது)
Non-Fiction💖💘💘💔💓அன்பிற்காக ஏங்கும் அவன் அன்பே வடிவமாய் இவள் .உலைக்களமாய் இருக்கும் அவன் நெஞ்சில் தாலாட்டும் சங்கீதமாய் அவள் வந்த kadhai.