செல்லும் வழியில் பருந்து தன் குஞ்சை பாதுகாக்க ஆங்காங்கே கண்காணித்து கொண்டே வருவதை போல் யாரேனும் பின் தொடர்கிறார்களா என்று நோட்டமிட்டு கொண்டே வர அதிதியோ ஏனோ இன்று பேச பிடிக்காமல் அவனுடனான முதல் பைக் பயணத்தை மனதில் பதிவிட்டு கொண்டே வந்தால் .
அதே போல் 2 நாட்கள் செல்ல அன்று மாலையில் ஹரி கண்காணித்து கொண்டே வருவதை பார்த்துவிட்ட அதிதி அவனிடம் "என்னடா ஏதோ தேடிட்டே வர "என்க
அவனோ "ஒன்னும் இல்லடா அதி சும்மா தான் "என்க
அவளோ "வண்டிய நிறுத்துடா "என்றாள்
அவன் "ஏன் ஏன் "என்க
அவளோ "இப்போ நிறுத்த போறியா இல்லையா ?"என்று அவள் கோபமாய் கூற அவனும் நிறுத்தி விட்டான் .
அங்கே இவர்கள் இருவரையும் தவிர்த்து யாரும் இல்லை .அவன் முன் சென்று நின்றவள் அவன் கண்ணை நேராய் பார்த்து "நீ ஏன் என்கிட்ட எல்லாத்தையும் மறைக்குற ??அன்னைக்கு உன் drawing notela என்ன வச்சுருக்கன்னு கேட்டா அதுக்கும் எதுவும் சொல்லல இப்போ என்ன தேடிட்டே வரன்னு கேட்டா அதுக்கும் எதுவும் சொல்ல மாட்டேங்குற.எனக்கு எதுவும் தெரியாதுன்னு பாக்குறியா ."என்க அவன் திகைத்து விழிக்க
அவளோ "என்ன அந்த முழி முழிக்குற நீ drawing notela வரைஞ்சு வரஞ்சுருந்ததை நா பாத்துட்டேன் ."என்றவள் முகத்தில் சற்று செம்மை குடியேற
அவளது அம்முகத்தை ரசித்தவன் "என்ன வரைஞ்சுருந்தேன் அதி??"என்று அவள் முகம் நிமிர்த்தி கேட்க
அவளோ "அது அது....."என்று இழுக்க அவனோ மௌனமாய் சிரித்துக்கொண்டே அவளை பார்த்துக்கொண்டிருக்க
சற்று நேரம் யோசித்தவள் பின் நிமிர்ந்து அவன் முகத்தை பார்த்து "ஸ்ட்ரெயிட்டாஹ் சொல்லிருறேன் ஐ லவ் யு "என்க அவனோ இதை சற்றும் எதிர் பார்க்கவில்லை பேய் முழி முழித்தவனை பார்த்தவளுக்கு சிரிப்பு வர அவன் அருகில் குனிந்து அவன் கன்னத்தில் இதழ் பதித்தவள் "இப்போ சொல்ல வேணாம் நல்லா யோசிச்சு நாளைக்கு சொல்லு அதுக்கு மேல உனக்கு டைம் கெடயாது ஏன்னா எனக்கு பொறுமை இல்ல "என்று கண்ணடித்தவள் அவன் பின்னே ஏறி அமர்ந்து கொண்டால்
YOU ARE READING
தாலாட்டும் சங்கீதம்(முடிவுற்றது)
Non-Fiction💖💘💘💔💓அன்பிற்காக ஏங்கும் அவன் அன்பே வடிவமாய் இவள் .உலைக்களமாய் இருக்கும் அவன் நெஞ்சில் தாலாட்டும் சங்கீதமாய் அவள் வந்த kadhai.