அனைவரும் உண்டுவிட்டு களைந்து சென்று விட வீட்டிற்கு வந்த பின் நண்பர்கள் ஒரு வாரம் இங்கே தான் தங்குவதற்கு முடிவு செய்திருந்ததால் இங்கேயே இருந்து விட சைந்தவி வினீஷா பூஜாவுடன் தங்க அதிதி நவ்யா மற்றும் ஸ்வஸ்திகா ஸ்னேஹாவுடன் தங்க ஹரிக்கும் நெருங்கிய நண்பர்கள் உண்டு (நான் தான் அதுங்கள காதலை எவ்ளோ பேர தான் சமாளிக்கிறது ) அதில் அவன் ஓத வயதுடைய அவன் மாமன் மகன் சதீஷும் அவனும் மிகவும் நெருக்கம் அவன் அவனுடன் தங்க மற்ற உறவினர்கள் அனைவரும் அவர்கள் கதையை பேசிக்கொண்டே ஆரோ ஒரு குடும்பமாய் ஒரு ஒரு அறையில் தங்க
இவ்வாறே மகிழ்ச்சியுடனும் கொண்டாட்டத்துடனும் பற்பல சண்டைகளுடனும் சமாதானங்களுடனும் சடங்குகளுடனும் ஒரு வார காலம் கழிய அன்றைய நாளும் வந்தது .மண்டபம் முழுதும் ஜொலி ஜொலிக்க ஆடவர்கள் வேட்டி சரசரக்க அங்கிருந்த கன்னி பெண்களின் கொலுசொலியும் வலை ஒளியும் சிரிப்பொலியும் புதியதோர் ஸ்வரத்தை சேர்க்க வாழை மரங்கள் இரண்டு கம்பீரமாய் வந்தோரை வரவேற்கும் தோரணையில் தலைசாய்த்து வரவேற்க அதை அடுத்து தன் செல்ல மகளின் திருமணத்திற்கு வந்தவர்களை உபசரிக்கும் பணியில் சைந்தவியின் அப்பாவும் அம்மாவும் ஈடு பட்டிருக்க தன் தமக்கை மற்றும் அண்ணனின் திருமணத்திற்கு வந்தவர்களை போட்டி போட்டுகொண்டு அதிதியும் ஹரியும் நவ்யாவும் தத்தம் துணையை
கவனித்துக்கொண்டே கவனிக்க இளங்காளைகள் இளங்கன்னியர்களை கவனிக்க பெரியவர்கள் தங்கள் உறவுகளுடன் குடும்ப கதைகளை பேசி சிரிக்க நிகழ்வுகளின் நாயகியான சைந்தவியோ சிகப்பு வண்ண பட்டு சேலையில் உச்சி முதல் பாதம் வரை தங்கம் பூட்டி கயல் விழியில் கண்மையதை தீட்டி எழிலோவியமாய் அமர்ந்திருந்தாள் தோழிகளின் கேலிகளிலும் தன்னவனின் எண்ணத்திலும் சிவந்து .
பூஜா "சையு செம அழகா இருக்கடி இன்னிக்கு வித்யுத் பாடு திண்டாட்டம் தான் "என்க
வினீஷா "பூஜா ரொம்ப நாலா லவ் filmseh வரலன்னு பீல் பண்ணல கவலையே படாத இன்னிக்கு liveaah பாக்கலாம் "என்க
YOU ARE READING
தாலாட்டும் சங்கீதம்(முடிவுற்றது)
Non-Fiction💖💘💘💔💓அன்பிற்காக ஏங்கும் அவன் அன்பே வடிவமாய் இவள் .உலைக்களமாய் இருக்கும் அவன் நெஞ்சில் தாலாட்டும் சங்கீதமாய் அவள் வந்த kadhai.