அடுத்த நாள் கலை விழாவிற்காக அனைவரும் பாரம்பரிய உடையில் வர வேண்டும் என்று கூறியதால் ஒரு இளஞ்சிவப்பு சட்டையும் வேஷ்டியும் அணிந்தவன் தன் கை காப்பை சரி செய்தவாறே கிழிறங்க அவன் வருவதை பார்த்த லட்சுமி அம்மா அவனிற்கு திருஷ்டி கழித்தவர் "அப்டியே ராசாவாட்டம் இருக்க தம்பி .பத்திரமா போயிட்டு வாயா"என்றவர் அவனுக்கு வழிவிட ஒருமுறை அவன் எண்ணம் இன்ற சைந்தவி சேலை கட்டி இருப்பாளோ என்று எண்ணமிட்டது .
பின் என்றும் அவன் உள்ளே வந்ததும் செல்லும் அறைக்கு சென்றவன் ஒரு 10 நிமிடம் கழித்து மீண்டும் வெளியே வந்து தன் வாகனத்தை கிளப்பியவன் வேகமாகவே கல்லூரிக்கு வந்திறங்கினான்.வந்து வண்டியை விட்டு இறங்கியவனின் கண்களிற்கு முதலில் கிடைத்த தரிசனமே சைந்தவியுடையது தான் .
நடுவில் மட்டும் கிளிப் குத்தப்பட்டு விரித்து விட பட்ட கருங்கூந்தலும்,சற்று பூசினாற்போன்ற அவள் தேகத்திற்கு பாந்தமாய் பொருந்தியிருந்த அவன் அணிந்திருந்த அதே வண்ணத்தில் பட்டு சேலையும்,மையிட்ட கண்களும் ,புருவத்திற்கு மத்தியில் ஒற்றை கல் பொட்டும் அதற்கு மேல் மெல்லிய கீற்றாய் சந்தனமும் ,அவள் அசைவிற்கு அசையும் காதணிகளும்,முன்பின் சேலை கட்டாததால் அவ்வப்போது அவள் தடுக்கி பின் சீர்செய்து கொண்டு வரும் நடையும் அவனை சிலை ஆக்க அவன் அருகில் வந்தவள் கோபமாக முறைத்து கொண்டு நின்றாள்.
அவள் முறைப்பதை கூட கவனிக்காதவன் அவளை பார்வையால் பருகி கொண்டிருக்க அதை கவனிக்காத அவள் அவன் தலையில் நட்டென்ன்று தட்டி அவனை நிகழ்விற்கு கொண்டு வந்தால் .
அவள் அடித்ததில் சுய நினைவிற்கு வந்தவன் அவள் முறைப்பதை பார்த்து "அய்யயோ நாம பச்சயா சைட் அடிச்சுட்டோமே அதுக்கு தான் மொறைக்கிறாளோ "என்று பார்க்க
அவளோ"நீ இப்டி பண்ணுவேன்னு நெனச்சு கூட பார்க்களடா,ஏன்டா இப்டி பண்ண ?"என்று வினவ
அவனோ "செத்தோம் "என்று மனதில் நினைத்து கொண்டவன் "என் .....என்னாச்சு நா என்ன பண்ணேன் ?"என்க
YOU ARE READING
தாலாட்டும் சங்கீதம்(முடிவுற்றது)
Non-Fiction💖💘💘💔💓அன்பிற்காக ஏங்கும் அவன் அன்பே வடிவமாய் இவள் .உலைக்களமாய் இருக்கும் அவன் நெஞ்சில் தாலாட்டும் சங்கீதமாய் அவள் வந்த kadhai.