6

6.7K 280 81
                                    

 அடுத்த நாள் பயிற்சி நடைபெற நேற்றைய நிகழ்வை நேற்றே மறந்திருந்த சைந்தவி பாடப்புத்தகத்தில் தன்னை தொலைத்திருந்தாள் சற்று ஓய்வெடுக்க வந்தவன் அவளுக்கு அருகிலேயே அமர்ந்தான் .அமர்ந்தவன் என்ன என்று பார்க்க அவளோ பாட புத்தகத்தில் மூழ்கி இருந்தால் .

சைந்தவிக்கு படிக்க ஆரம்பித்தாள் சுற்றி என்ன நடந்தாலும் தெரியாது அவன் வந்து அருகில் அமர்ந்ததையே உணராமல் இருந்தவளை சீண்ட நினைத்தவன்" ஹே சையு உன் காலுக்கடில எலி "என்று கத்த

அவளோ "அம்மா எலி "என்று புத்தகத்தை கீழே போட்டு இருக்கையின் மேலே ஒரே குதியில் ஏறியவள் அவன் தோளை பிடித்து கொண்டு "எங்க எங்க ??"என்று பயத்துடன் தேட அவனோ அவளை கண்டு பயங்கரமாக சிரித்துவிட்டான் .

அவன் சிரிப்பதை பார்த்தவள் தன் சிறு கண்களை மேலும் சுருக்கி அவனை முறைக்க அவன் அவளின் முகத்தை கண்டு மேலும் சிரித்து விழுந்தான் .கையிலிருந்த புத்தகத்தை வைத்தே அவனை 4 அடி தலையில் போட்டவள் "frauduh ரோபோ ஏன்டா இப்டி பண்ண "என்று கேட்க

அவனோ "அப்பறோம் நா வந்தது கூட தெரியாம சிலை மாறி இருந்தியா அதான் உயிரோட இருக்கியா இல்லையானு பாக்க டெஸ்ட் பண்ணேன் ஆனாலும் என்ன குதிடி குதிக்கிற இரு பெஞ்சுஹ் ஒடஞ்சுருச்சானு பாக்குறேன் ."என்று பெஞ்சை பார்க்க அதற்கும் அவளிடம் வாங்கி கட்டிக்கொண்டான் .பின் அவள் அருகில் அமர்ந்தவன் சற்று நேரம் போனை நோண்ட அவனது coach அழைத்ததால் அவசரமாக சென்றவன் கை தவறுதலாக பட்டு வாய்ஸ் ரெக்கார்டர் on ஆகிவிட்டது .

அன்று மேகம் இருட்டி கொண்டு வர மழையின் பிரியை ஆகிய சைந்தவி மெல்லமாய் ஒரு பாட்டை முணுமுணுக்க துவங்கினால்

"புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது

இந்த கொள்ளை நிலா உடல் அணைகின்றது

இங்கு சொல்லாத இடம் கூட குளிர்கிறது

மனம் சூடான இடம் தேடி அலைகின்றது

நதியே நீயானால் கரை நானே

சிறு பறவை நீயானால் உன் வானம் நானே"

தாலாட்டும் சங்கீதம்(முடிவுற்றது)Where stories live. Discover now