அத்தியாயம் - 1

22.9K 330 23
                                    

"மணி எட்டாச்சு இன்னும் என்ன தூக்கம் உனக்கு எழுந்திரு" கடிந்துக்கொண்டு ஃபேன் ஸ்விட்சை அணைத்தார் கஸ்தூரி. "அம்மா பிலீஸ் ஃபேன் ஆன் பண்ணு" சிணுங்களுடன் எழுந்து அமர்ந்தாள் மாயா. நெற்றியில் படர்ந்திருந்த நீண்ட கரிய கூந்தலை ஒரு கையால் ஒதுக்கினாள். "மா திஸ் இஸ் நாட் ஃபேர்" அம்மாவிடம் உதட்டை சுளித்து கூறினாள்.

"இப்போ எழுந்து போய் பல் துலக்கிட்டு வந்தா காபி தருவேன் இல்லைனா இன்னிக்கு உனக்கு காபி இல்ல" கறாராக கூறினார் கஸ்தூரி. அழகாக சோம்பல் முறித்து பல் துலக்க சென்றாள். "இன்னிக்கு லீவு தானே கொஞ்ச நேரம் தூங்கட்டுமே!" காபியை குடித்தப் படி கேட்டார் ராஜாராம். 

"நீங்க தர செல்லம் தான் அவ கெட்டு போக காரணம். நாளைக்கு கல்யாணம் ஆகி போற வீட்ல இவ்ளோ நேரம் தூங்குனா உங்கள யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க. பொண்ண எப்படி வளர்த்திருக்கா பாருனு என்ன தான் திட்டுவாங்க" கடுகடுத்தார் கஸ்தூரி.

"சரி சரி, மீனா எங்க?" பேச்சை மாற்றினார் ராஜாராம். "அவ கோவிலுக்கு போயிருக்கா. அதிகாலையே எழுந்து குளிச்சிட்டு கோவிலுக்கு போய்ட்டா. இவள விட சின்ன பொண்ணு எவ்வளவு பொறுப்பா இருக்கா. இவளுக்கு எப்போ இந்த பொறுமை பொறுப்பெல்லாம் வருமோ!?" பெருமூச்சுடன் கூறினார். 

"சரி விடுமா ஒரு பொண்ணு உன்ன மாதிரி இன்னொரு பொண்ணு என்ன மாதிரி" சிரிப்புடன் சமாளித்தார் ராஜாராம். "பொண்ண மட்டும் எப்பவும் விட்டுக் கொடுக்க மாட்டீங்களே!" கூறிக்கொண்டு காபி தயார் செய்ய சமையல் அறை நோக்கி சென்றார்.

அம்மா கலந்து தந்த காபியை ரசித்து குடித்தாள் மாயா. "அம்மா உன் கைப் பக்குவத்துக்கு நீ மட்டும் செஃப் ஆயிட்டா நாம ஒரு பெரிய ஹோட்டல் ஆரம்பித்து விடலாம்" தந்தையை பார்த்து கண்ணடித்து விட்டு கூறினாள் மாயா. "எதுக்காக இப்போ ஐஸ் வைக்குறே!?" சந்தேகமாக பார்த்தார் கஸ்தூரி.

"ஐஸ்ஸெல்லாம் இல்ல மா, நிஜமா தான்" என்றாள். "சரி, குளிச்சுட்டு வா சாப்பிடலாம்" என்று கூறிவிட்டு சமையல் அறைக்குள் நுழைந்தார். "அப்பா, பிரின்ட்ஸ் என்ன இன்னிக்கு வெளிய கூப்பிடாங்க நா வரேன்னு சொல்லிட்டேன். அம்மா கிட்ட பெர்மிஸ்ஸன் வாங்கி தாங்க" கெஞ்சலாக கேட்டாள்.

மலர்கள் கேட்டேன் வனமே தந்தாய்Where stories live. Discover now