அத்தியாயம் - 56

5.5K 221 39
                                    

இல்லம் முழுவதும் அழகிய வண்ண மலர்களால் அலங்கரிக்க பட்டு, பார்பதற்கு மிகவும் அழகாக காட்சி அளித்தது. அனைத்து சொந்தங்களும் அங்கு கூடி இருந்தனர்.

இளஞ்சிவப்பு வண்ண பட்டு புடவையில், தேவதை போல் அலங்கரிக்க பட்டிருந்தாள் மீனா. அவள் முகம் மகிழ்ச்சியில் மேலும் அழகாக தெரிந்தது. "மீனு உன் முகம் மேக்கப் போடாமலே இவ்வளவு அழகா இருக்கே! இன்னும் மேக்கப் போட்டா அவ்வளவுதா, மாப்பிள்ளை இன்னைக்கே கல்யாணம் செஞ்சுக்கணும்னு சொல்லிருவாருனு நினைக்கிறேன்" அவள் உறவினர்கள் அவளை கேலி செய்ய, அவள் முகம் சிவந்தது.

"எல்லாரும் சும்மா இருங்க! மீனு நிஜமாவே செம்ம அழகா இருக்க" என்று கூறி அவளுக்கு திருஷ்டி பொட்டு வைத்து விட்டாள் மாயா.

அனைத்து உறவினர்களும் மீனாவின் வீட்டில் இருந்தனர். மயில் வாகனம் பல ஆண்டுகளுக்கு பிறகு ராஜாராம் இல்ல விழாவில் பங்கேற்று இருந்தார். மீனா சிவாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்த அவர்கள் முடிவெடுத்து இருந்தனர், அடுத்த மாதம் அவர்கள் திருமணத்தையும் நடத்த திட்டமிட்டு இருந்தனர்.

மீனா, மாயா இருவரும் மகிழ்ச்சியின் உச்சத்தை அடைந்து இருந்தனர். "அவுங்க சொன்னது சரி தான் மீனு, சிவா உன்ன பாத்தா, நாளைக்கே கல்யாணத்தை வச்சுக்கலாம்னு கேட்டாலும் கேப்பாரு" மாயா அவள் காதருகில் ரகசியமாக சொல்ல, "சும்மா இரு மாயா" மீனா அவளை செல்லமாக கடிந்து கொண்டாள்.

"அலங்காரம் எல்லாம் முடிஞ்சுதா? மாப்பிள்ளை வந்துட்டாரு. கொஞ்ச நேரத்தில பொண்ண அழைச்சிட்டு வர சொல்லுவாங்க" படபடப்பாக பேசிக் கொண்டு கஸ்தூரி உள்ளே வந்தார். "எல்லாம் ரெடி! பாருங்க உங்க பொண்ண" என்று கூறி மாயா மீனாவை காட்ட, அவர் அவளை ஆசையாக அணைத்துக் கொண்டார்.

"என் கண்ணே பட்டுரும் போல இருக்கு" என்று கூறி அவள் நெற்றியில் முத்தம் கொடுத்தார், அவளுக்கு நெட்டி முறித்து விட்டு, சிறிது நேரம் கழித்து அவளை கீழே அழைத்து வர மாயாவிடம் சொல்லி விட்டு கீழே சென்றார்.

மலர்கள் கேட்டேன் வனமே தந்தாய்Where stories live. Discover now