அத்தியாயம் - 52

6.1K 255 48
                                    

"மீனாட்சி ஒரு நிமிசம் நில்லு!" சங்கரை பார்த்து விரைவாக வேறு திசையில் சென்றவளை வேண்டினான் சங்கர்.

மாறன் மாயா, அவளிடம் திருமணம் பற்றி பேசிய நாளில் இருந்து சங்கரிடம் பேசுவதை நிறுத்தி விட்டாள் அவள். அவன் மனது அதனால் மிகுந்த வேதனையில் இருந்தது. இன்றும் அவனை பார்த்து விட்டு பார்க்காதது போல் அவள் செல்ல, அவனுக்கு வேதனை அதிகரித்தது.

"உங்க கிட்ட பேச எதுவும் இல்ல! நான் வீட்டுக்கு போகனும்" என்றாள் அவன் முகம் பார்க்காமல்.

"மீனாட்சி! உன்னுடைய நிலை எனக்கு புரியுது. ஆனா, இப்படி பேசாமல் எனக்கு தண்டனை கொடுக்காத மீனாட்சி. ஏதோ என் மேல இருக்க பாசத்துல, மாறனும் மாயாவும் உன்கிட்ட கல்யாணத்தை பத்தி பேசினாங்க.

ஆனா, உன்கிட்ட அத பத்தி பேசினதில எனக்கு கொஞ்சமும் விருப்பம் இல்ல" சங்கரின் வார்த்தைகள் கேட்டு அவளுக்கு கண்ணீர் வந்தது.

"யாரு தான் என்ன மாதிரி ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிக்க விருப்பப் படுவாங்க?!" வெறுமையாக சொல்லிவிட்டு அவள் நகர முற்பட, "அப்படி சொல்ல வரல மீனாட்சி. உன்ன கல்யாணம் செஞ்சுக்கிர தகுதி எனக்கு இல்லைனு சொன்னேன். இத தான் நான் மாறன் கிட்டயும் சொன்னேன். நாம எது மேல வேணும்னாலும் ஆசை படலாம் ஆனா நம்ம ஆச படுறதெல்லாம் கிடைக்கணும்னு இல்ல.

உன் மேல காதல் வந்த கணமே அது வெறும் கனவு தான், ஒரு போதும் நிறைவேறாதுனு எனக்கு தெரியும். ஆனா நானே எதிர்பார்க்காம மாறன் உன்கிட்ட அத பத்தி சொல்லிட்டான்.

பிளீஸ் மீனாட்சி, அவன் சொன்னத மறந்திரு. இப்படி பேசாம மட்டும் இருக்காதே! என்னால அத தான் தாங்கிக்க முடியல" சங்கர் அவன் மனதில் இருந்ததை வேதனையுடன் சொல்லி முடித்து விட்டு அங்கிருந்து நகர்ந்தான். மீனாட்சியின் கண்கள் அவன் சென்ற திசை நோக்கி, கலங்கி இருந்தன.

"மாமா! இன்னிக்கு நீங்க கண்டிப்பா வயலுக்கு போய் தான் ஆகனுமா?" மாயா அவன் முகத்தை பார்க்க, "உனக்கு என்ன ஆச்சு? உடம்பு சரி இல்லையா? காலைல இருந்து என்னவோ மாதிரி பேசிட்டு இருக்க?" அவன் குழப்பமாக அவள் அருகில் அமர்ந்தான்.

மலர்கள் கேட்டேன் வனமே தந்தாய்Where stories live. Discover now