அத்தியாயம் - 17

8.6K 273 46
                                    

"எப்பவும் எல்லாம் உங்க விருப்பப்படி தானே நடந்திருக்கு இதுக்கு மட்டும் ஏன் என்னோட பெர்மிஷன் கேக்குறீங்க. உங்க இஸ்ட்டம் உங்களுக்கு என்ன தோணுதோ அத செய்யுங்க" உணர்ச்சியற்ற முகத்துடன் சென்ற மகளை கண்ணீருடன் பார்த்தார் கஸ்தூரி. "இவ ஏன் எதையும் புரிஞ்சுக்க மாட்டேன்றா. எப்போதான் இவ மனசு மாறும்" அவர் ஆதங்கப்பட, "நான் தான் சொன்னேனே மா, அவளுக்கு கொஞ்சம் அவகாசம் தேவை. இப்போ நாம செய்யுறது அவளுக்கு கொஞ்சமும் பிடிக்காது" ராஜாராம் அவரை தேற்ற முயன்றார்.

"இது தான் அவளுக்கு தலை பொங்கல். கண்டிப்பா இத கொண்டாடிதான் ஆகனும். ஆனா இவ இப்படி எதுலயும் ஈடுபாடு இல்லாம இருக்காளே" அவர் மேலும் உணர்ச்சிவசப்பட, "இரு மா, இன்னும் ரெண்டு நாள் இருக்கு, அவ சம்மதிப்பா. இந்த நிலை அவ வாழ்க்கைல கண்டிப்பா ஒருநாள் மாறும்" ராஜாராம் ஆறுதலாக கூறிவிட்டு சென்றார்.

பொங்கலுக்கு ஊருக்கு வர சொல்லி வள்ளி காலையில் அழைத்திருந்தார். அதை மாயாவிடம் கூறியதில் இருந்து அவள் இவ்வாறு எதிலும் ஈடுபாடில்லாமல் பதில் அளித்து வந்தாள். அவளை அவ்வாறு காண கஸ்தூரிக்கு கவலையாக இருந்தது.

"என்னாச்சு மாயா? உன் வாய்ஸ் ஏன் ரொம்ப டல்லா இருக்கு?" சுமி வருத்தத்துடன் வினவ, மாயாவும் தன் வீட்டில் நடந்தவற்றை கூறினால். "சரி, இதுக்கு ஏன் கோப படுறே! தலை பொங்கல் வாழ்க்கைல ஒரு தடவதா வரும். அத ஏன் நீ தவிர்க்க நினைக்கிறே? சந்தோசமா போய்ட்டு வா!" சுமி எதார்த்தமாக கூறினால்.

"ஆமா, கல்யாணமும் வாழ்க்கைல ஒரு முறைதான் நடக்கும் அதுவே எனக்கு விருப்பம் இல்லாம தான் நடந்துச்சு. இப்போ இந்த பொங்கல் வேற கொண்டாடனுமா?" என்று அவள் சலிப்புடன் பதில் அளித்தாள். "இப்படியே பேசிட்டு இருக்காதே மாயா, நடந்ததை யாராலையும் மாத்த முடியாது. இப்போ நடக்குறதையும் அப்படியே ஏத்துக்கோ! அதுதான் எல்லார்க்கும் நல்லது" சுமி அவள் மனதில் பட்டதை கூற, "யாருக்கும் என்னோட நிலை எப்பவும் புரியாது" என்று கூறி கை பேசியை அனைத்து விட்டாள்.

மலர்கள் கேட்டேன் வனமே தந்தாய்Where stories live. Discover now