அத்தியாயம் - 27

7.6K 302 46
                                    

இருள் சூழ்ந்த வானில், ஒரு அழகான வெள்ளை பந்து போல் சுடர் ஒளியாய் ஒளிர்ந்து கொண்டிருந்தது முழுநிலவு. இதமான காற்று அந்த அறை முழுவதும் பரவியிருந்தது; இரவு உணவு முடித்துவிட்டு மாயா அவள் அறையை அடைந்தாள். அவள் வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த துணிகளை எடுத்து அந்த அறையில் இருந்த அலமாரியில் அடுக்கி வைத்தாள். அவள் அவ்வாறு செய்யும் பொழுது உள்ளூர ஒரு விதமான ஆனந்தத்தையும் உணர்ந்தாள்.

மாறன் அவன் ஆடைகளை ஒருபுறமாக அடுக்கி வைத்துவிட்டு இவளது உடைமைகளை வைக்க ஒரு பகுதியை ஒதுக்கி வைத்திருந்தான். அவன் அவ்வாறு அவன் அலமாரியில் அவளுக்கு இடம் ஒதுக்கி வைத்திருந்ததை பார்த்து அவள் மனம் குதூகளித்தது.

அவள் அதை எடுத்து வைத்துக் கொண்டிருந்த போது மாறன் அறைக்குள் நுழைந்தான். "மாயா எல்லா வேலையும் முடிச்சுட்டு தூங்கு நானும் தூங்க போறேன்" என்று சொல்லிவிட்டு அறையை விட்டு வெளியேற முயன்றான். "ஒரு நிமிஷம்! நீங்க எங்க போறீங்க? இந்த அறையிலேயே நீங்களும் இருக்கலாம்ல எதுக்காக மாடில போய் தூங்குறீங்க? அங்க பனியா இருக்கும், எதுக்காக உங்க உடம்ப கெடுத்துக்கணும்" அவள் தட்டு தடுமாறி அவள் நினைத்ததை கேட்டு முடித்தாள்.

"மாடியில தூங்குறது எனக்கு புதுசு இல்ல மாயா, எல்லாம் பழகினது தான் அதனால எனக்கு எதுவும் ஆகாது நீ அதை பத்தி எல்லாம் யோசிக்காம நிம்மதியா தூங்கு" என்று கூறி விட்டு அறையை விட்டு வெளியே சென்று விட்டான். மாயாவிற்கு வருத்தமாக இருந்தது. "என் மேல அவருக்கு இன்னும் கோபம் போகல!" அவள் மனம் வருந்தியது. இருப்பினும் அதை சரி செய்ய வேண்டும் என்று உறுதியாக நினைத்துக் கொண்டு மீதி உடைமைகளை எடுத்து வைத்தாள்.

மறுநாள்,

அதி காலையிலேயே மாறன் வயலுக்கு சென்று விட்டான். மாயா எழுந்து வள்ளியை காண வந்தாள். "அத்தை!" அவள் புன்னகையுடன் அழைக்க, வள்ளி அவளை அன்பாக திரும்பி பார்த்தார்.

"வா டா தங்கம். இந்தா காபி சாப்பிடு" என்று கையில் வைத்திருந்த காபியை அவளிடம் கொடுத்தார். அவளும் அதை வாங்கி கொண்டு, "மாமா எங்க போய்ட்டாரு?" அவள் வீடு முழுவதும் பார்த்து விட்டு வினவ, "அவன் அதிகாலையிலேயே வயலுக்கு போய்ட்டான் மா" என்றார் புன்னகையுடன்.

மலர்கள் கேட்டேன் வனமே தந்தாய்Where stories live. Discover now