அத்தியாயம் - 11

8K 275 33
                                    

"இங்க நடந்தத பாத்துட்டு தானே இருந்தே! இப்போ ஆச்சும் அந்த பொண்ணு போனா என்ன என் பொண்ண உனக்கு கட்டி வைக்கிறேன் டா மருமகனேனு நீ ஒரு வார்த்தை சொல்லி இருந்தா நீ நல்லவன்.

உன் பொண்ணுக்கு மட்டும் நல்லா படிச்சு பெரிய உத்யோகத்தில் இருக்கிற பையன் வேணும், ஆன ஊரான் வீட்டு பொண்ணுங்க இந்த பட்டிக் காட்டுலையும் வயல்லையும் கிடந்து கொடுமையை அனுபவிக்கனும்.

அவனுக்கு விவசாயம் பண்ணுறதுதான் பிரியம்னா இந்த மாதிரி அழகான படிச்ச பொண்ணுங்க மேல அவன் ஆசையும் பட்டிருக்க கூடாது" பூங்குழலியின் வார்த்தைகள் அவர் முகத்தில் அறைந்தாற்போல் உணர்ந்தார் ராஜாராம்.

அவள் அவ்வாறு பேசுவாள் என்று அவர் ஒருபோதும் எண்ணியது இல்லை. அங்கு கண்ணீர் வெள்ளத்தில் இருந்த தன் தமக்கையை ஒரு வித குற்ற உணர்ச்சியுடன் பார்த்தார். பூங்குழலி கூறியது சரி என்று அவர் மனதுக்கு பட்டது. ஏன் தனக்கு அது தோன்றவில்லை என்று தன்னை தானே கேட்டுக்கொண்டார்.

மனதில் தீர்மானித்து விட்டு, தன் தங்கையிடம் சென்றார். "வள்ளி தயவுசெய்து அழாதே மா. எல்லாம் சரியாகிவிடும் "அவர் அவள் கரம் பற்றி கூறினார். "அண்ணா, என் மகனைப் பார். இதில் அவன் தவறு என்ன? அவனுடைய சின்ன வயசிலிருந்தே அவன் தந்தையின் அன்பையும் அரவணைப்பையும் இழந்திருக்கான். சின்ன குழந்தைகள் பெற்றோரிடமிருந்து கிடைக்கிற பல தருணங்களை அவன் இழந்திருக்கான் . இப்போ இந்த திருமணமும் அவனை இப்படி உடச்சிருச்சு. நான் ஒரு நல்ல தாய் இல்ல அண்ணா. நான் என் மகனுக்காக ஒரு தவறான பெண்ணைத் தேர்ந்தெடுத்துட்டேன் "என்று கதறிய வள்ளி திடீரென மயங்கி விழுந்தார்.

அனைவரும் அதிர்ச்சியடைந்தனர், வள்ளியின் முகத்தில் தண்ணீர் தெளித்தார்கள். அவள் எழுந்தாள் ஆனால் அவள் அழுவதை நிறுத்தவில்லை. "தயவுசெய்து அழ வேண்டாம் மா, உன் உடல்நலம் கெட்டுவிடும்" அவர் ஆறுதல் கூற முயன்றார்.

"அண்ணா நான் இன்னும் இருந்து என்ன ஆக போகுது, நான் இறக்க விரும்புகிறேன் அப்போதாச்சும் என் பையனுக்கு நல்ல வாழ்க்கை அமையட்டும். நான் வாழ விரும்பலை அண்ணா. இப்போ என் பிள்ளைக்கு எப்படி இருக்கும், மணவரை வரை வந்து பையன் பிடிக்கலைனு பொண்ணு போய்ட்டா, அந்த பையனின் வாழ்க்கை நரகமாகும். இவ்வளவு நடந்த அப்புறம் அவன் எப்படி வெளியே கம்பீரமா போக முடியும். இனி அவன் வாழ்க்கை என்ன ஆகும் அண்ணா? "அவள் மேலும் அழுதாள்.

மலர்கள் கேட்டேன் வனமே தந்தாய்Where stories live. Discover now