அத்தியாயம் - 55

5.6K 246 53
                                    

சில மாதங்களுக்கு பிறகு,

டெல்லி,

"மாமா! எனக்கு கொஞ்சம் பதட்டமா இருக்கு" நகத்தை கடித்தவாரு மாயா கூற, "ஒன்னும் கவலை படாதே மாயா. எனக்கு நம்பிக்கை இருக்கு, உனக்கு கண்டிப்பா இதுல வெற்றி கிடைக்கும்" மாறன் உறுதியாக கூறி, அவள் கரம் பற்றிக் கொண்டான்.

"இது உன்னுடைய கனவு. இன்னிக்கு உணகான வெற்றி உனக்கு கண்டிப்பா கிடைக்கும். உன்னோட உழைப்பு வீணாக போகாது. இப்போ தூங்கு, காலைல பங்க்ஷன் இருக்கு! இப்போ நல்லா தூங்கினா தான் காலைல ஸ்டேஜ்ல முகம் ஃப்ரெஷ்ஷா இருக்கும்" என்று கூறி, அவள் கூந்தலை மெதுவாக வருடி அவளை உறங்க வைத்தான்.

நாளை நடக்கவிருக்கும் போட்டியில் சிறந்த ஆடை வடிவமைப்பாளர் ஆக வேண்டும் என்ற அவளின் நீண்ட நாள் கனவு நனவாகுமா என்று எண்ணிக் கொண்டே உறங்கினால் மாயா.

கடந்த மூன்று வாரங்களாக, சரியாக உண்ணாமல், போதுமான உறக்கம் இன்றி, இரவு பகலாக வேலை செய்து அந்த போட்டிக்கான ஆடையை வடிவமைத்தாள் அவள். மாறன் அவள் அந்த போட்டியில் வெற்றி பெறுவாள் என்று உறுதியாக நம்பினான்.

அஜய் சிறைக்கு சென்று மூன்று மாதங்கள் முடிந்திருந்தது. பூங்குழலி ஒரு தாயாக அவனுக்காக வருத்தப் பட்ட போதும், அந்த தண்டனை அவனுக்கு சரியானது தான் என்று எண்ணினார். சிறையில் இருந்து வந்த பிறகாவது திருந்தி வாழ்ந்தால் நல்லது என்று கருதினார். மயில் வாகனம் மனதில் எந்த வருத்தமும் இல்லை. அவனுக்கு தக்க தண்டனை கிடைத்ததாகவே கருதினார்.

மறுநாள்,

மாறனும் மாயாவும் விழா நடைபெறும் அரங்கை அடைந்தனர். மீனாவும் அந்த சமயம் அங்கு வந்திருந்தாள். "மாயா! என்ன ரொம்ப டென்ஷனா இருக்க? நீ கவலையே படாதே! கண்டிப்பா நீதா வின்னர்" மீனா அவள் கட்டை விரலை உயர்த்தி கூற, மாயா புன்னகைத்தாள்.

மூவரும் அரங்கத்திற்குள் சென்றனர். "அம்மா, அப்பா, அத்தை எல்லாரும் இருந்திருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்" மாயா வருத்தமாக கூற, "அப்படியா?" மாறன் ஒற்றை புருவம் உயர்த்தி கேட்டான். "ஆமா!" அவள் அவன் முகம் பார்த்து பதில் அளித்தாள்.

மலர்கள் கேட்டேன் வனமே தந்தாய்Where stories live. Discover now