அத்தியாயம் - 41

7.5K 296 71
                                    

ஒரு பட்டாம்பூச்சி போல் சுற்றி திரிந்து கொண்டிருந்த தன் மகள் ஒரே அறையில் எதையோ பரிக்கொடுத்ததை போல் அடைந்திருப்பதை பார்த்து கஸ்தூரியின் மனம் வேதனை அடைந்தது.

"மாயா! மீனாவுக்கு என்னாச்சு? ஏன் என்னவோ மாதிரி இருக்கா?" கஸ்தூரி கவலையாக மாயாவை கேட்க, மாயா என்ன சொல்வதென்று தெரியாமல் மௌனமாக இருந்தாள்.

"என்ன மா, அவ உன்கிட்ட எதாவது சொன்னாலா?" அவர் மீண்டும் கேட்க, "ஒன்னும் இல்ல மா, ஏதோ குழப்பத்தில இருக்கா, அவள கொஞ்ச நேரம் தனியா யோசிக்க விட்டா அவளே சரி ஆயிடுவா. நீங்க எதுக்கும் வருத்தப் படாதீங்க" மாயா அவருக்கு சமாதானம் சொல்ல,

"என்ன குழப்பம், வேலை எதாவது ரொம்ப கஷ்டமா இருக்கா? அப்படி எதாவது இருந்தா, அந்த வேலைய விட்டுட்டு அவள இங்கேயே வர சொல்லிரு மா. அவ இப்படி கஷ்ட்டப் பட்டு வேலை செய்யணும்னு இங்க எந்த அவசியமும் இல்ல" தாய் மனம் துடிக்க, என்ன பேசுவது என்று தெரியாமல் மாயா வெறுமனே அவர் முகம் பார்த்தாள்.

"அப்படி எல்லாம் எதுவும் இல்ல மா, அவ வேற ஏதோ யோசனையில இருக்கா, சீக்கிரம் சரி ஆயிருவா. நீங்க கவலை படாம, நிம்மதியா இருங்க. நான் மீனாகிட்ட பேசுறேன்" என்று கூறி தாயை தேற்றினாள். அவரும் அறை மனதாக ஒப்புக் கொண்டு, சமையல் வேலைகளை கவனித்தார்.

மாயாவின் மனமும் மீனாவின் நிலை கண்டு கலங்கியது.

"தேவா! பிளீஸ் என்கிட்ட எதையும் மறைக்காதீங்க. என்ன நடந்துச்சுனு சொல்லுங்க" மாறன் வேண்டிக் கேட்டுக் கொள்ள, தேவாவும் அவனுக்கு தெரிந்ததை சொல்ல நினைத்தான்.

"சிவா மீனா மேல உயிரையே வச்சிருந்தான். அவளோட படிப்பு முடிஞ்சதும் அவகிட்ட அவனோட காதல் சொல்லப் போறதா சொல்லிட்டு இருந்தான். நானும் அவன சின்ன வயசுல இருந்து பாத்திருக்கேன். சொந்தம்னு அவனுக்கு யாரும் இல்ல, நிறையா கஷ்டங்கள அனுபவிச்சு தான் இந்த நிலைக்கு வந்திருக்கான். மீனா தான் அவன் வாழ்க்கைல அவனுக்கு கிடைச்ச முதல் சொந்தமா அவன் நினச்சான்.

மலர்கள் கேட்டேன் வனமே தந்தாய்Where stories live. Discover now