அத்தியாயம் - 47

7K 283 78
                                    

"எனக்கு என்னவோ அன்னிக்கு நடந்த எல்லாமே இவனோட திட்டம்னு தோணுது. மாமா சொத்துக்காக ஆசப் பட்டு உன்ன கல்யாணம் செஞ்சுகிட்டானு நினைக்கிறேன்" அஜய் அவன் மனதில் இருந்த விசத்தை வார்த்தைகளாய் உதிர்க்க, மாயாவின் கண்களோ அதிர்ச்சி கலந்த கோபத்தில் சிவந்திருந்தது. அதே கோபத்துடன் அவனை பார்த்தாள்.

"என்ன? என்ன பாத்து எதுக்கு முறைக்குற? இவ்வளவு நடந்துருக்கு, அவன் உனக்கு த்ரோகம் பண்ணிட்டு இன்னொரு பொண்ணு கூட சேந்து ஊர் சுத்திட்டு இருக்கான்... ஞாயமா...." அவன் பேசி முடிப்பதற்குள் பலார் என்று அவன் முகத்தில் அறை விழ, அவன் தட்டு தடுமாறி அவள் முகம் பார்த்தான்.

"இன்னொரு வார்த்த அவர பத்தி பேசுன, உன்ன கொண்ணுருவேன்" அவள் கண்களில் தெரிந்த ரௌதிரத்தை பார்த்து அவன் அதிர்ந்து போனான். மாயா அஜயை அறைந்ததை பார்த்து மாறனும் அதிர்ந்து போனான். அவர்கள் அருகில் வந்தான்.

"மாயா! என்ன நடந்துச்சு?" அவன் பதட்டமாக அவள் அருகில் வந்தான். "நீங்க இருங்க மாமா" மாறனிடம் கூறி விட்டு அஜயை திரும்பி பார்த்தாள்.

"என்ன சொன்ன? என்ன ஏமாத்தி கல்யாணம் பண்ணிகிட்டாரா? அவர பத்தி பேச உனக்கு என்ன தகுதி இருக்கு? அவரு என்ன உன்ன மாதிரி கேவலமான ஜென்மம்னு நினச்சயா?" அவள் கோபத்தில் பொரிய, "மாயா! எல்லாரும் பாத்துட்டு இருக்காங்க! நீ என்ன செஞ்சிட்டு இருக்க" மாறன் அவள் கரங்களை கண்டிப்புடன் பற்றினான்.

"மாமா! நீங்க ஒரு நிமிஷம் அமைதியா இருங்க. பொறுமையா இருந்தது போதும்" மாறனிடம் உறுதியாக கூறிவிட்டு அஜய் முகத்தை கோபத்துடன் பார்த்தாள்.

"அவரு யாரையும் ஏமாத்துல. மீனாட்சிய சந்திச்ச மறுநாளே அத என்கிட்ட சொல்லிட்டாரு. அது மட்டும் இல்ல மீனாட்சி வாழ்க்கைல என்ன நடந்துச்சுனும் எனக்கு நல்லாவே தெரியும். எல்லாம் தெரிஞ்சும் அவள வேற ஊர்ல தங்கவச்சது, எனக்கு தெரியாம அவள சந்திக்கரதுக்காக இல்ல, ஏற்கனவே வேதனையில நொந்து போய் இருக்க அவ மனசு, உன்ன மாதிரி சில பேர் பேச்சால இன்னும் வருத்தப் பட கூடாதுனு தான்.

மலர்கள் கேட்டேன் வனமே தந்தாய்Where stories live. Discover now