அத்தியாயம் - 13

8K 267 35
                                    

அனைவரும் அந்த இடத்தில் கூடியிருக்க, மாறன் அனைவரையும் பார்த்து பேசத் தொடங்கினான். "மாமா உங்களுக்கு தெரியாதது எதுவும் இல்ல, இந்த திருமணம் எந்த சூழல்ல நடந்துச்சுனு எல்லார்க்கும் தெரியும். இந்த திடீர் திருமணத்தால மாயா எந்த விதத்திலும் பாதிக்க பட கூடாதுனு நான் விரும்புறேன்" என்றான் தீர்மானமான குரலில். அவன் என்ன சொல்ல நினைக்கிறான் என்று தோன்றாமல் அவன் முகத்தை பார்த்தனர் மாயாவின் குடும்பத்தினர்.

"அவ இப்போதான் இரண்டாம் ஆண்டு கல்லூரி படிக்குறா. அவ படிப்பு இன்னும் முடியல, அதை அவ அமைதியான சூழல்ல எந்த தடையும் இல்லாம முடிக்கனும்னு நாம் விரும்புறேன் மாமா. அவ படிப்பு முடியுர வரைக்கும் அவ அங்கேயே இருக்கட்டும்.  அவளுடைய கனவுக்கு நான் ஒருபோதும் தடையா இருக்க விரும்பலை மாமா "என்று அவன் உறுதியுடன் கூறினான்.

ராஜாராம் அவனை ஆச்சர்யமாக பார்த்தார். பின் வள்ளியை திரும்பி பார்த்தார், மாறன் சொல்வதை தான் முழுமனதோடு சம்மதிப்பதை உணர்த்தியது அவள் புன்னகை. கஸ்தூரியின் மனம் மகிழ்ச்சியில் நிறைந்தது. மீனா அவனை நன்றியுடன் பார்த்தாள்.

"ஆனாலும் மாப்பிள்ளை, இங்க நம்ம சொந்தக்காரங்க எதாவது சொல்லுவாங்க.." ராஜாராம் முடிப்பதற்குள்,

"யார் அண்ணா சொந்தக்காரங்க, நானும் என் பையனும் கஷ்ட்டப்படும் போது எங்கள ஏளனம் செஞ்சாங்களே அவுங்களா? போதும் அண்ணா, ஊர்; சொந்தக்காரங்கனு வாழ்ந்தது போதும். இனிமேல் ஆச்சும் பெத்த பிள்ளைங்க சந்தோசத்துக்காக வாழனும்னு முடிவு பண்ணிட்டேன்.

மாயா பொண்ணு இங்க இருந்தாலும் அவளால ஒரு நிம்மதியான வாழ்க்கைய வாழ முடியாது அண்ணா. எனக்கும் சிலது நேத்து என் பையன் என்கிட்ட பேசுன அப்புறம் தான் புரிஞ்சுது நானும் சுயநலமா யோசிச்சுட்டேன்" கண் கலங்கினார் வள்ளி.

"இல்ல மா, இங்க யாரும் தப்பு பண்ணல, நம்ம பிள்ளைங்களுக்கு நல்லது தான் செஞ்சிருக்கோம். இன்னிக்கு இல்லைனாலும் ஒரு நாள் கண்டிப்பா அவுங்க அத புரிஞ்சுப்பாங்க" உறுதியாக கூறினார் ராஜாராம். வள்ளி அவர் கூறிய வார்த்தைகளில் ஆறுதல் அடைந்தார்.

மலர்கள் கேட்டேன் வனமே தந்தாய்Where stories live. Discover now