அத்தியாயம் - 28

7.5K 290 64
                                    

மாயா மாறனின் யோசனைப்படி அவள் பணியை தொடங்கி இருந்தாள். அவள் குறுகிய நேரத்தில் ஆடையை வாடிக்கையாளர்களின் ரசனைக்கு ஏற்ப அழகாக வடிவமைத்த விதம் அனைவருக்கும் வியப்பாகாவே இருந்தது. அவள் எந்த ஒரு உதவியாளரும் இல்லாமல் அனைத்து பணிகளையும் தனியாகவே கவனித்தாள். மாறன் அவள் ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் பார்த்து வாயடைத்து போனான்.

அவள் தோழி ஒருத்தியின் திருமணம் அந்த சமயத்தில் நடைபெற இருந்தது. மாயாவின் ஆற்றலை முற்றிலும் உணர்ந்திருந்த அவள் தோழி, அவளிடமே அவள் கல்யாண ஆர்டரை கொடுத்து விட்டாள். அவள் திருமணத்தில் அணியவிருக்கும் அனைத்து ஆடைகளையும் மாயாவே வடிவமைக்க வேண்டும் என்று அவள் கேட்டுக் கொள்ள, மாயா மனமகிழ்ச்சியுடன் சம்மதித்தாள்.

அவள் தன் தொழிலை தொடங்கிய சில நாட்களிலேயே கிடைத்த அந்த அறிய வாய்ப்பு, மாயாவை மேலும் உற்சாக படுத்தியது. அவள் முழு கவனத்துடன் அந்த வேலைகளை தொடங்கினாள்.

வள்ளியும் அவளுக்கு அவராலான உதவிகளை செய்து வந்தார். திருமணத்திற்கு குறுகிய நாட்களே இருந்த காரணத்தால் மாயா இரவும் பகலும் வேலை செய்ய வேண்டியதாக இருந்தது.

அன்று இரவு பன்னிரண்டு மணி அளவில் அவள் வேலை செய்து கொண்டு இருந்தாள். தண்ணீர் குடிக்க வந்த மாறன் அவள் உறங்காமல் இருப்பது கண்டு வியந்து போனான். அவள் அருகில் நடந்து சென்றான். "மாயா மணி 12 ஆச்சு நீ இன்னும் தூங்கலையா?" அக்கறையுடன் அவன் கேட்க, "இல்ல மாமா! எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு இத மட்டும் முடிச்சுட்டு தூங்கிடுறேன்" என்றாள் அவள்.

"எல்லா வேலைகளையும் காலைல கவனிக்கலாம் இப்போ போய் தூங்கு" அவன் பறிவாக கூற, "பிளீஸ் மாமா! இன்னும் கொஞ்ச வேலை தான் பாக்கி இருக்கு. இன்னும் ஒரு அரை மணி நேரம் தான் ஆகும். முடிச்சுட்டு தூங்குறேன்" அவள் கெஞ்சலாக கேட்க, அவன் பதிலேதும் பேசாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்று விட்டான்.

"ஐய்யோ! அவரு நம்ம மேல கோப பட்டுட்டு போய்ட்டாரே! பேசாம நாம அவர் பேச்ச கேட்டு உள்ள போய் தூங்கி இருக்கணுமா! அப்படி விட்டுடா! இத காலைல மறுபடியும் முதல்ல இருந்து தொடங்கனுமே! இப்போ என்ன செய்யறது?" அவள் தொடர்ந்து சிந்தித்துக் கொண்டு இருக்கையில் அவள் நினைவு சங்கிலியை உடைத்தவாரு அவன் அவள் முன் வந்து நின்றான்.

மலர்கள் கேட்டேன் வனமே தந்தாய்Where stories live. Discover now