அத்தியாயம் - 4

9.5K 254 10
                                    

மூடுபனி அந்த அழகிய குன்றின் அடிப்பகுதியை விழுங்கியது, அது புதிதாய் அரும்பிய அரும்புகள், புற்கள் மற்றும் இலைகளின் அழகை தன் வெண்மையால் மறைத்தது. அது அவற்றின் நிறத்தை வெளியேற்றி, எல்லாவற்றையும் பாறையின் அதே கல் சாம்பல் நிறமாக மாற்றிக் கொண்டிருந்தது.

புதிதாய் வீசும் குளிர்ந்த காற்று மற்றும் மிருதுவான காற்று கண்ணுக்கு தெரியாத பேய் போல விசில் அடிக்க ஆரம்பித்தது. சிவப்பு மற்றும் பச்சை நிற பறவைகள் மிளகாய் போன்ற தங்கள் அழகுகளால் அவற்றின் மெல்லிசையை தொடங்கின.

பிரம்மாண்டமான தோட்டம் ஒரு அரச அரண்மனை போல நின்றது மற்றும் அடர்த்தியான உலர்ந்த வலுவான பழுப்பு நிற பெரிய கிளைகள் காலையை வரவேற்று நடனமாடின. எண்ணற்ற அழகான பச்சை பழுப்பு நிற இலைகள் தங்கள் காலைத் திட்டங்களைப் பற்றி ஒருவருக்கொருவர் கிசுகிசுப்பது போல அந்த காலை பொழுது அமைந்திருந்தது.

அந்த அழகிய அதிகாலை பொழுதை வியந்தபடி காரில் அமர்ந்திருந்தாள் மாயா. ராஜாராம், கஸ்தூரி மற்றும் மீனா மூவரும் இரண்டு நாட்களுக்கு முன்னரே சென்றிருக்க, மாயா அவளுக்கு இருந்த சில வேலைகளை முடித்து விட்டு இரண்டு நாட்கள் கழித்து சென்றாள்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஓர் மலையடிவாரத்தில் அழகாக அமைந்திருந்த அந்த கிராமம், அவள் மனதை மயக்கியது.

"இந்த இடமெல்லாம் ஆறு வருசத்துக்கு முன் பாத்த மாதிரி இன்னும் அப்படியே இருக்கு!!" வியப்பாக கூறினாள். "ஆமா மா, இங்க இருக்கவங்க எல்லாரும் இன்னும் விவசாயத்த விடாம செஞ்சிட்டு இருக்காங்க அதான் இந்த ஊர் இன்னும் அப்படியே இருக்கு" என்றார் முத்து, இருபது வருடங்களாக அவர்களிடம் வேலை செய்பவர். அவரை அவர்கள் குடும்பத்தில் ஒரு உறுப்பினர் ஆகவே அனைவரும் நடத்தினர்.

"அண்ணா, கொஞ்ச நேரம் வண்டிய நிறுத்துறீங்களா? நா ஃபோட்டோ எடுத்துக்கிறேன்" என்றாள் அழகாக. "சரி மா, சீக்கிரம் வாங்க. அங்க எல்லாரும் உங்களுக்காக கத்துகிட்டு இருக்காங்க" என்றார் அவர் பணிவாக.

மலர்கள் கேட்டேன் வனமே தந்தாய்Where stories live. Discover now