அத்தியாயம் - 50

6.7K 266 64
                                    

மீனாட்சி சங்கர் பற்றி மாயா கூறியதை மனதில் எண்ணிக் கொண்டே அன்று வயலுக்கு வந்தான் மாறன். சங்கரிடம் அதை பற்றி பேச வேண்டும் என்று முடிவெடுத்து இருந்தான்.

"என்னடா எதோ யோசனையில இருக்க மாதிரி தெரியுது?" சங்கர் மாறன் முகம் பார்த்து கேட்க, "உன்கிட்ட ஒன்னு கேட்பேன். நீ தப்பா எடுத்துக்க மாட்டியே?" மாறன் தயக்கத்துடன் கேட்டான்.

"டேய் என்ன டா ஏதோ மூணாவது மனுசங்க கிட்ட பேசுற மாதிரி பேசுற? நான் உன் நண்பன் டா, என்கிட்ட நீ என்ன சொல்லி நான் தப்பா எடுத்திருக்கேன்?" சங்கர் அவன் எண்ணியதை கூற, "மீனாட்சி பத்தி நீ என்ன நினைக்கிற?" மாறன் நேராக விசயத்திற்கு வர, "என்ன நினைக்குறேனா? புரியல?!" சங்கர் பதில் கேள்வி கேட்டான்.

"நான் நேராவே கேட்கிறேன், மீனாட்சிய உனக்கு பிடிச்சிருக்கா? அந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்கிறயா?" மாறன் திடீரென்று அப்படி கேட்பான் என்று எதிர் பாராத சங்கர், அவனை அதிர்ச்சியாக பார்த்தான்.

"என்ன டா அப்படி பாக்குற? உன் மனச தொட்டு உண்மைய சொல்லு! உனக்கு மீனாட்சிய பிடிக்கலையா?" மாறன் அவன் முகம் பார்த்து கேட்க, "எனக்கு மீனாட்சிய ரொம்ப புடிக்கும் டா! ஆனா...." அவன் வேறெதுதும் சொல்லும் முன், "ஆனா என்ன டா? உனக்கு பிடிச்சிருக்கு. அந்த பொண்ணுக்கும் உன்ன பிடிச்சு இருந்தா அவுங்க அப்பா கிட்ட நான் பேசுறேன்" மாறன் உறுதியாக கூற,

"அதுக்கு இல்ல டா! அந்த பொண்ணு இப்போ தான் அவளுக்கு நடந்த கசப்பான சம்பவத்துல இருந்து வெளிய வந்துட்டு இருக்கா. அப்புறம் அவ படிப்பையும் இப்போ தான் முடிச்சு இருக்கா, இந்த சமயத்துல எப்படி டா கல்யாணத்த பத்தி பேசுறது.

அவ நிலைமைல இருந்து யோசிச்சு பாரு. பாவம் அந்த பொண்ணு வரிசையா எத்தனை கொடுமைகளை அவ வாழ்க்கைல பாத்திருக்கா. அறியாமல் செஞ்ச ஒரு சின்ன தப்புக்காக அதுவும் அவ மனசுக்கு பிடிச்ச பையன் கூட வாழுறதுக்காக தான் அத செஞ்சா, ஆனா அவ வாழ்க்கை இப்படி கேள்விக் குறியா போயிருச்சு. அந்த பொண்ணு நிலையில யார் இருந்தாலும் நடந்ததை அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது.

மலர்கள் கேட்டேன் வனமே தந்தாய்Where stories live. Discover now