அத்தியாயம் - 32

7.7K 286 48
                                    

"மறுபடியும் எங்க போயிடீங்க மாமா?" என்று எண்ணிக் கொண்டு அவனை அறை முழுவதும் பார்வையால் தேடிக் கொண்டு இருந்தாள்.

"யார தேடுற மாயா?" அவள் செவிக்கு மிக அருகில் அவன் குரல் கேட்க, அவள் திடுக்கிட்டு அவனை திரும்பி பார்த்தாள். அவன் நமட்டு சிரிப்புடன் அவள் அருகில் நின்றிருக்க, "நான் யாரையும் தேடல" மாயா உதட்டை சுளித்து பதில் அளித்து விட்டு அந்த இடத்தில் இருந்து வேகமாக நகர முற்பட்டாள். அவள் இரண்டடி நகர்வதற்குள் அவனின் கரம் அவளின் கரத்தை பற்றியிருந்தது.

அவள் திரும்பி அவன் முகம் பார்த்தாள், "பாட்டு ரொம்ப நல்லா இருந்துச்சு. உன்னோட குரல் அதை விட ரொம்ப இனிமையா இருந்துச்சு" அவன் அவளை பாராட்ட, அவள் மனம் துள்ளிக் குதித்தது.

"பாட்டு நல்லா இருந்துச்சு, என் வாய்ஸ் நல்லா இருந்துச்சுனு சொல்லுறீங்க மாமா, ஆனா அந்த பாட்ட உங்கள நினைச்சு தான் பாடினேன்னு உங்களுக்கு எப்போ புரியும்?

எனக்கு தெரியாத பாட்டுக் கெல்லாம் நீங்க அர்த்தம் சொன்னீங்க, இப்போ நான் உங்களையே நினைச்சு பாடின இந்த பாட்டோட அர்த்தத்தை எப்போ புரிஞ்சுக்க போரீங்களோ? அந்த கடவுளுக்கு தான் வெளிச்சம்" பாராட்டிய கணவன் முகத்தை ஏக்கமாக பார்த்தாள்.

"உன்னோட மனசுல நீ இப்போ என்ன நினைக்குறேனு எனக்கு தெரியும் மாயா! கூடிய சீக்கிரம் நீ எதிர்பார்த்த எல்லாம் நடக்கும். அதுக்கு அப்புறம் மற்றவர்களுக்காக நாம வாழும் வாழ்க்கை மாறி, ஒரு புது வாழ்க்கையை நாம வாழ போறோம். அந்த உலகத்துல நீ; நான்; நாம் மட்டும் தான். யாருக்காகவும் இல்லாம நமக்கான நம்ம வாழ்க்கையை வாழ போறோம். அந்த நாள் ரொம்ப தூரத்தில் இல்ல" அவன் மனதில் தோன்றிய எண்ணத்தின் பிரதிபலிப்பாக அவன் அழகிய இதலோரம் சிறு புன்னகை அரும்ப, அதை பார்த்த அவளது மனம் தன்னிலை இழந்தது.

அவனது அந்த ஒற்றை புன்னகையே போதும், அவள் மனதில் இருந்த அனைத்து கோபங்களும் இருந்த இடம் தெரியாமல் போய் இருந்தது.

மலர்கள் கேட்டேன் வனமே தந்தாய்Where stories live. Discover now