அத்தியாயம் - 60

9.9K 340 203
                                    

மிகவும் எளிமையான முறையில் சங்கர் மீனாட்சி திருமணம் நடைபெற்றது. ரவியை கொலை செய்த, அவனின் தந்தைக்கும் அவன் தமயனுக்கும் ஆயுள் தண்டனை பெற்றுக் கொடுத்த பின்னரே மீனாட்சியின் கரம் பிடித்தான் சங்கர். அவள் மனதில் இருந்த ஒரே குறையும் நிறைவு பெற்று, முழு மனதோடு அவனை ஏற்றுக் கொண்டாள் மீனாட்சி. வள்ளியின் தலைமையில், அவர்கள் குலதெய்வ கோவிலில் அவர்கள் திருமணம் நடைபெற்றது.

அனைவரும் மனதார மணமக்களை வாழ்த்தினர். அஜய் மனம் திருந்தி ஒரு புது மனிதனாக மாறி இருந்தான். மீனாட்சியை சந்தித்து மனதார மன்னிப்பு கேட்டான். மீனாட்சியும் அவன் மாற்றத்தை கண்டு, அவனை மன்னித்து விட்டாள்.

சில நாட்களாக, மாறனுடன் சேர்ந்து விவசாயம் செய்ய தொடங்கி இருந்தான். அவன் படிப்பை வைத்து, விவசாயத்திற்கு தேவைப் படும் பல கருவிகளை அவனே கண்டுப் பிடித்து, அதை வெற்றிகரமாக செலுத்தியும் காட்டினான். அனைவரும் அவன் திறனை கண்டு, மனதார பாராட்டினர்.

அவன் அத்தனை காலம் ஏங்கி கொண்டு இருந்த பாராட்டு வெகு இயல்பாக அவனுக்கு கிடைத்ததை எண்ணி ஆச்சரியம் கொண்டான். "இதற்காக தானே பல தவறுகள் செய்தோம், மாறனை தாழ்த்தி நான் வெற்றி பெற வேண்டும் என்று எண்ணி கொண்டிருந்தேன் ஆனால் இன்று, ஒருவருக்கு பயன்படக் கூடிய உதவியை செய்ய வேண்டும் என்று மனதார எண்ணிக் கொண்டு செய்யும் செயலுக்கு தான் நிஐமான வெற்றி கிடைக்கும் என்று புரிந்து விட்டது" என்று மனதில் எண்ணினான்.

கொடுஞ்செயல் புரியும் ஒவ்வொருவரும் தங்கள் நிலை உணர்ந்து, அந்த தவறை திருத்திக் கொண்டாள் எஞ்சிய நாட்கள் மிகவும் அழகாக இருக்கும் என்பது அவனுக்கு புறிந்திருந்தது.

அதே மனதோடு மீனாவிடமும் மன்னிப்பு கேட்க, இனியேனும் திருந்தி நல்ல மனிதனாக வாழ வேண்டும் என்று எண்ணி, அவளும் அவனை மன்னித்து விட்டாள். குடும்பம் முழுவதும் விழாக் கோலம் பூண்டது போல் மிகவும் கலகலப்பாக இருந்தது.

மலர்கள் கேட்டேன் வனமே தந்தாய்Where stories live. Discover now