அத்தியாயம் - 3

9.9K 280 12
                                    

"கொரங்கு மாதிரி, அதானே ஹா...ஹா... ஹா "மாயா கைபேசியில் பேசியவாரு வீட்டுக்குள் நுழைந்தாள். அனைவரும் அவளை திரும்பி பார்க்க, அவள் புன்னகையுடன் உள்ளே வந்தாள்.

"சரி டி, நா ஈவ்னிங் கால் பன்றேன் பை!" என்று கைபேசியை வைத்தாள். "மாயா, இங்க வா, யார் வந்திருக்கா பாரு?" கஸ்தூரி அழைக்க அவளும் அவர்கள் முன் சென்று நின்றாள்.

மாறனை அடையாளம் காண முடியாமல் யார் என்பது போல் கஸ்தூரியை பார்த்தாள். "மாறா, மாயா அடையாளம் தெரியாம மாறிட்டா தானே" அவர் புன்னகையுடன் வினவ மாயாவின் முகமோ மாறியது.

"என்னது மாறனா?? சின்னவயசுல எலி குட்டி மாதிரிதானே இருந்தான் இப்போ என்ன ஆறடில வாட்ட சாட்டமா வந்து நிக்குறான். நாம மண்டய ஒடிச்சத மனசுல வச்சிருப்பானோ, பழிவாங்க இப்போ அட்டாக் பண்ணா நம்ம நிலமை என்ன ஆகும்??" அவள் மனதில் பல சிந்தனைகள் ஓடிக்கொண்டு இருக்க,

"ஆமா அத்த, நீங்க சொல்லுறது சரிதான். அப்போ நல்லா சாம்பார் பூசணி மாதிரி இருந்தா, இப்போ முருங்கைக்காய் மாதிரி இருக்கா?" சிரிப்பை அடக்கிக் கொண்டு கூறினான்.

"என்ன???!!! நா முருங்கக்காய்யா?!😖 நல்லா உருளக்கிழங்கு மாதிரி இருந்துட்டு என்ன பத்தி பேச வந்துட்டாரு சீமராஜா 😏" பற்களை கடித்தவாரு கூறினாள்.

"மாயா, பெரியவங்க கிட்ட இப்படியா பேசுவ" கஸ்தூரி கடிந்துக்கொள்ள, "அதை அங்கேயும் சொல்லுங்க" அவள் அந்த இடத்தை விட்டு சென்றுவிட்டாள்.

"ஏண்டா இன்னும் அவள சீண்டிட்டே இருக்க. இன்னொரு தடவ மண்ட உடயனும்னு ஆசையா இருக்கா?" ராஜாராம் கேலி செய்ய, "அய்யோ!! அதெல்லாம் இல்ல மாமா, நா மனசுல தோணினதை மைண்ட் வாய்ஸ்னு நெனச்சு சத்தமா சொல்லிட்டேன். அதுக்குன்னு உங்க பொண்ணு அரிவாள தூக்கிட்டு வந்துற போறா, காப்பாத்துங்க மாமா" அவன் கலவரமாக கூற, ராஜாராம் வாய்விட்டு சிரித்தார்.

"மாமா!!" இனிமையான குரல் உற்சாகத்துடன் ஒலித்தது. அவன் மலர்ந்த புன்னகையுடன் திரும்பினான்.

மலர்கள் கேட்டேன் வனமே தந்தாய்Tempat cerita menjadi hidup. Temukan sekarang