அத்தியாயம் - 26

7.8K 288 41
                                    

"ஹலோ! மாயா.. மீனா கிட்ட பேசிட்டயா? இப்போ அவ சமாதானம் ஆகிட்டாளா?" அஜய் போலி பாசத்துடன் வினவ, "இப்போ நல்லா இருக்கா அஜய். ரொம்ப தேங்க்ஸ்! நீதான் சரியான நேரத்தில இத பத்தி எனக்கு சொன்னே, இல்லாட்டி இது எனக்கு தெரியாமல் போயிருக்கும்" மாயா நன்றி கூற, அவன் தந்திரமாக நாகைத்தான்.

"அவ சந்தோசம் தான் எனக்கு முக்கியம் மாயா. அதுக்கு எதுக்கு நீ நன்றி சொல்றே?"

"பரவா இல்ல அஜய்!"

"சரி அடுத்து என்ன செய்ய போறா?"

"அவளுக்கு வேலை கிடைச்சிருக்கு அதை செய்ய போறா. அதுக்காக டெல்லி போக போறா" மாயா அவன் எதிர்பாராத விஷயத்தை சொல்ல அவன் திகைத்து நின்றான்.

"டெல்லியா?? அங்க அவளை ஏன் தனியா அனுப்புறீங்க? அங்க ஏதாவது பிரச்சனைனா அவை யார்கிட்ட சொல்லுவா?" அவன் பதட்டமானான்.

"எந்த பிரச்சினையும் இல்ல அஜய், அவ இங்க இருந்தா தான் ரொம்ப கஷ்டப்படுவா. அதனால அவளுக்கு இந்த மாற்றம் தேவை தான் அப்போதான் நடந்ததிலிருந்து அவ வெளிய வர முடியும்" மாயா எதார்த்தமாக பதிலளித்தாள்.

"சரி மாயா, அவள கவனமாய் இருக்க சொல்லுங்க" அவன் பற்களை கடித்துக் கொண்டான்.

"சரி அஜய் வேற என்ன?"

"நீ அடுத்து என்ன பண்ணப் போற மாயா? நீயும் டெல்லி போகணும்னு சொன்னியே அது எப்போ?" அவன் வினவ, "அது அடுத்த வருடம் தான் அஜய். நா நாளைக்கு மீனாவை வழியனுப்பி விட்டு, மாறன் மாமா கூட ஊருக்கு போக போறேன்" அவளுக்குள் மகிழ்ச்சியாக உணர்ந்தாள். அது அவனுக்கு மேலும் அதிர்ச்சியாக இருந்தது.

"ஊருக்கு போக போறியா?" அவன் ஆச்சர்யமாக கேட்க, "ஆமா அஜய்! படிப்பு தான் முடிஞ்சுதுல இனி என்னோட வீட்டுக்கு போய் தானே ஆகணும்" அவள் எதார்த்தமாகவே பேசினாள்.

"சொல்லறேன்னு தப்பா எடுத்துக்காத நீ டெல்லியில நடக்கிற பேஷன் டிசைனிங் ஷோல கலந்துகிட்டு ஜெயிக்கணும்னு கனவு கண்டு கொண்டிருந்த, இப்போ அந்த கிராமத்துக்கு போய், இந்த ஒரு வருஷம் எப்படி உன்னோட லட்சியத்தை அடைய முயற்சி செய்வ, ஒரு வருஷம் நீ ஒரு நல்ல டிசைனரா இருந்தா தான நீ அடுத்த வருஷம் கலந்துக்க முடியும் அந்த பட்டிக்காட்டுள போய் என்ன பண்ண போறே?" அவன் நக்கலாக கேட்க மாயாவிற்கு கோவம் வந்து விட்டது.

மலர்கள் கேட்டேன் வனமே தந்தாய்Where stories live. Discover now