6. தனலட்சுமி

2.4K 222 316
                                    

6. தனலட்சுமி:

"வீசிப்போன புயலில்
என் வேர்கள் சாய வில்லை!

ஒரு பட்டாம் பூச்சி மோத
அது பட்டென்று சாய்ந்ததடி!

எந்தன் காதல் சொல்ல
என் இதயம் கையில் வைத்தேன்!

நீ தாண்டிப்போன போது
அது தரையில் விழுந்ததடி!"

எலுமிச்சை நிற புடவையில் அவளின் தேகம் அந்த புடவையின் நிறத்திற்கு போட்டி போட, சிறு வேர்வைத் துளிகள் ரோஜா மீது இருக்கும் பனித்துளி போல பூத்திருக்க, புன்னகை முகமாக அமர்ந்திருந்தவளை கண்டவன் மெய் மறந்து பார்த்திருந்தான்.

'இவள்தான் என்னவொரு அழகு!
ஆது மா நீ நிஜமாவே வானுலகத்திலிருந்து எனக்காக மட்டுமே இறங்கி வந்த தேவதை டி!' என மனதில் நினைத்தவன்

அவளையே கன்னத்திற்கு கைகொடுத்து வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

"ம்ஹக் ம்ஹக்" அவளின் விக்கல் சத்தத்தில் சண்டையிடுவதை நிறுத்தி இவளை திரும்பி பார்த்தவர்கள் ஒரே மாதிரி, "உன்னை யாரோ நினைக்கிறாங்க டி" என்று கூறவும் அவளின் எண்ணங்களோ அந்த முகம் தெரியா நபரை நோக்கி பயணமானது.

அவள் மனதில் நினைத்த அடுத்த நொடி அவள் கைபேசியும் ஒலி கொடுக்க முகம் கொள்ளாப் புன்னகையுடன் அதை எடுத்தவள்
அவனின் மெசேஜிலும் இருந்த "ம்ஹக் ம்ஹக்" என்பதைப் பார்த்து முறைக்க ஆரம்பித்தாள்.

"போதும் போதும் மொபைல்லயே என்னை முறைச்சு எரிச்சுறாத ஆது மா" என்றவனின் பதிலில் இதழோரம் ஒரு புன்னகைத் தழுவ விழிகளைச் சுற்றிலும் படர விட்டவளின் கண்களுக்கு அகப்படாமல் மறுபடியும் மொபைலில் தான் இம்சை செய்ய ஆரம்பித்தான் அந்த கள்வன்.

"ஆது நீ ஏன் டி புடவைல இவ்வளவு கேவலமா இருக்க?" என்ற பதிலில் அதிர்ந்தவள், உடனே கீழே குனிந்து தன்னைப் பார்த்துக் கொண்டு
"தண்ணீர் குடிச்சுட்டு வரேன் " என்று கூறி உள்ளே ஓடிவிட்டாள்.

ஆங்காங்கே மணி ப்ளாண்ட் வைத்து வண்ண வண்ண சோபாக்கள், காபி மெஷின், அதனைக் கடந்து சென்றால் விளையாடுவதற்காகவே கேரம் மற்றும் செஸ், ஒரு ஓரத்தில் ஆளுயர கண்ணாடி என பொழுதை போக்கவே ஒரு இடத்தை அமைத்திருந்தனர்.

மனம் வருடும் ஓவியமே!Where stories live. Discover now