16. ஹேமா ப்ரீத்தா:தன் மகளுக்காக ஜூசை போட சமையலறைக்குள் நுழைந்த லட்சுமிக்கு மனதில் சிறு சஞ்சலம் ஏற்பட, தன் மகளின் மன சிந்தனை என்னவாக இருக்கும் என ஆராயத் தொடங்கியது...
ஒரு வேலை மாப்பிளை பிடிக்கவில்லையா.. ஆனால் அவள் மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்று அவள் இதுவரை கூறவில்லையே.. தன் மனதில் இருக்கும் எதையும் தெளிவாகவும் வெளிப்படையாகவும்
பேசும் பழக்கம் உடையவள் மாது..
இன்று அவளின் குழப்பத்திற்கு காரணம் புரியாது நின்றார்."மாது மா இந்த ஜூஸ்..
அதை வாங்கியவள் இன்னும் ஏதோ சிந்தனையிலேயே இருக்க மாதிரி இருக்கு?? என்னாச்சுடா?? என்ன யோசிக்கிற??" என அவள் தலையை பரிவாய் கோதிவிட்ட படியே கேட்க, "மாப்பிள்ளை பிடிக்கலையா டா உனக்கு? ".மாப்பிள்ளையைப் பிடிக்கவில்லை என கூற அவளிடம் ஒரு காரணமும் இல்லை
உண்மையை சொல்ல வேண்டுமானால் மதுவிற்கு விஜய்யை பிடித்துத்தான் இருக்கிறது.விஜயேந்திரன் நேரடியான பேச்சும் அவனின் வசீகரமும் அவளை வெகுவாக இருக்கத்தான் செய்தது ஆனால் இப்போது அவள் மனதில் ஓடுவது எல்லாம் யார் அந்த ஆது?? என்பது மட்டும்தான்.
அவள் என்னைப் போலவே இருப்பாள் என்று விஜய் வேறு சொன்னாரே 'நீங்கள் இருவரும் ஒரே மாதிரி இருக்கீங்க ஆனா உற்றுநோக்கினால் ரெண்டுபேருக்கும் கொஞ்சம் வித்தியாசம் இருக்கும்னு சொன்னாரு அப்போ விஜய்யும் ஆதுவும் நல்ல பழக்கமானவர்களா?' என ஆதுவை பற்றிய பல கேள்விகள் அவள் மனதை குடைந்து கொண்டிருந்தது.
'ஆது அவங்க முழு பேர் இதுதானா? அவங்க யாரு எங்க இருக்காங்க??' என அவள் மனம் தன்னை போல் இருப்பவளை பற்றி அறிந்து கொள்ள ஆர்வமாய் இருந்தது.
தன் தாயின் கேள்விக்கு பிடித்திருக்கிறது என்று சொல்ல வெட்கம் வந்து தடுத்தாலும் இல்லை என்று சொல்ல மனம் விரும்பவில்லை..
"என்னடா நான் கேட்ட கேள்விக்கு பதிலே காணோம்?".
"பிடிச்சிருக்கு மா" என வெக்கத்தோடு சொல்ல.
DU LIEST GERADE
மனம் வருடும் ஓவியமே!
Aktuelle Literaturஇந்த முயற்சியில் கைகோர்க்கும் எழுத்தாளர்களின் பெயர்கள். 1.dharshinichimba 2.hema4inba 3.Saramohan_ 4.Priyadharshini12 5.bhuvana2206 6.im_dhanuu 7.Ramya_Anamika 8.lakshmidevi 9.Anbin shijo 10.narmadhasenthilkumar 11.bhagi 12.Niru_lakshmigesan 13.Mad...