14. அனு சுவீட்டி:
நவியின் கேள்விக்கு, "வேற என்ன நவி? வாழைப்பழ காமெடிக்கு ஆன்சர் கிடைச்சிட்டு. ரெண்டு பேரும் இங்க தான் இருக்கு. ஆனா வேஸ்ட்." என இருவரையும் வெறுப்புடன் பார்த்தாள்...
நவியுடன் அவள் வீட்டில் நுழைந்தபின்
"எங்க டா வந்த? எவ்ளோ தைரியம் உனக்கு என் வீட்டுக்கு வந்து என் பொண்டாடிக்கிட்ட உனக்கு என்ன டா பேசணும்???" என்று கோபத்தில் கர்ஜித்தான் துருவ்.
"இங்க பாரு, நான் என்ன சொன்னாலும் அதை நீ கேக்குற நிலைமையில்லை. ஆனா, நான் எந்த மோடீவ்வோடயும் இங்க வரல டா..
நீ நினைக்கிற மாதிரி நான் ஆது கூட பழைய விஷயம் எதும் பேச வரல. ஒரு ரெண்டு நிமிஷம் மட்டும். துருவ் பிளீஸ் டா." என்றான் விஜய்."வாங்க டா. இன்னும் எத்தனை பேர் களம்பிருக்கிறீங்க? நேத்து வரைக்கும் நீ எந்த மனநிலையில் வேணாலும் இருந்திருக்கலாம். ஆனா, இனிமே என் பொண்டாட்டி மேல உன் நிழல் கூட படக்கூடாது. அப்பறம், நீ இதுவரைக்கும் பார்க்காத துருவேந்திரனை பார்ப்ப" என்றான் தன் ஆட்காட்டி விரலை நீட்டி எச்சரிக்கும் விதமாக.
விஜய் அவனை கலங்கிய கண்களோடு பார்த்தவன்.
"கொஞ்சம்கூட உனக்கு என் மேல நல்ல எண்ணம் இல்லல்ல. பரவால்லடா. ஏன்னா, சின்ன வயசிலிருந்து என்ன தான் அப்பா உங்களை விட்டு எங்ககூட வந்தாலும், உன்னையும் உங்க அம்மா பற்றியும் அவரு யோசிக்காத நாள் இல்லை. சொல்ல போனா சின்ன வயசிலிருந்து உன்னை பற்றி சொல்லி சொல்லி தான் என்னை வளர்த்தாரு. அவன் எவ்ளோ பொறுப்பானவன் தெரியுமா? நீயும் அப்படி தான் இருக்கனு அடிக்கடி..." என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே இடைமறித்தான் துருவ்.
"போதும் டா. நீயும் உங்க அப்பனும் பண்ற நாடகம். வெளில போடா மொதல்ல." என்று கத்தியவாரு அவனது சட்டையை கொத்தாக பிடித்தவன் அவனை வெளியே தள்ள முயன்றான்.
அவனது இரு கரங்களை தனது சட்டையிலிருந்து எடுத்த விஜய் அவனை ஓர் வெற்று பார்வை பார்த்தான்.
YOU ARE READING
மனம் வருடும் ஓவியமே!
General Fictionஇந்த முயற்சியில் கைகோர்க்கும் எழுத்தாளர்களின் பெயர்கள். 1.dharshinichimba 2.hema4inba 3.Saramohan_ 4.Priyadharshini12 5.bhuvana2206 6.im_dhanuu 7.Ramya_Anamika 8.lakshmidevi 9.Anbin shijo 10.narmadhasenthilkumar 11.bhagi 12.Niru_lakshmigesan 13.Mad...