38. சாத்விகா:
விஜய் சோகமாக சென்றதை பார்த்துக் கொண்டிருந்தவன் இன்று இதற்கு ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான் துருவ்.
எத்தனை நாட்கள் தான் இந்த கண்ணாமூச்சி ஆட்டம் ஆடுவது. சிறு வயதில் தான் மூவரும் வெவ்வேறு திசையில் வளர்ந்தனர். இனிமேலாவது ஒன்றாக ஒற்றுமையாக இருக்க வேண்டும் என துருவ் எண்ணினான்.
ஜீவா மற்றும் சஞ்சுவின் பார்வை பரிமாற்றத்தை சுவாரசியமாக பார்த்துக் கொண்டு இருந்தது துருவ் தான். தன் தம்பி ஏற்கனவே சிக்கி விட்டான் என்பதை அவன் உணர்ந்து கொண்டான்.
மகிழ்ச்சியாய் இருக்கும் வேளையில் அவனது மகிழ்ச்சியை கெடுப்பதற்காகவே அவனது தொலைப்பேசி ஒலி எழுப்பியது. அதை பார்த்தவுடன் அவனது முகத்தில் இருந்த மகிழ்ச்சி துணி கொண்டு துடைத்தது போல் ஆனது.
தனியாக சென்று அவனுடைய கோபத்தை துருவ் கட்டுப் படுத்திக் கொண்டு இருந்த வேளையில் அவனது தோளை ஒரு வலிய கரம் தொட்டது. யார் என்று திரும்பிப் பார்க்கையில் ஜீவா நின்றுக் கொண்டு இருந்தான்.
ஜீவா,"என்னாச்சு அண்ணா?"
துருவ்" அந்த ராஜேந்திரன் செக் எடுத்துட்டு போய் பேங்க் ல பணம் வாங்கி இருக்கான். பேங்க் ல இருந்து அறிவிப்பு ( notification) வந்திருக்கு. இனிமேல் நாம ரொம்ப ஜாக்கிரதையா அவனை கண்காணிக்கனும். நான் ஒரு பிரைவேட் டிடெக்டிவ் கிட்ட பேசுறேன்."
ஜீவா,"அதெல்லாம் வேண்டாம் . அவனை கண்காணிக்க நான் ஒரு ஆள் பார்த்திருக்கேன். "
"யாருடா?"ஜீவா,"சஞ்சனா தான் , அவ ஒரு டிடெக்டிவ் . அவ மூலமாக தான் உங்களை கண்டு பிடிச்சேன். அவ பார்த்துக்குவா."
"அப்போ சரி. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ரெண்டு பேரும் கண்ணாலேயே ஏதோ பேசிக்கிட்டு இருந்த மாதிரி தெரிஞ்சது. என்ன தம்பி விஷயம்?"
" நாங்க ரெண்டு பேரும் லவ் பண்றோம். முன்னாடி தான் எனக்கு யாரும் இல்லை. இப்போ தான் ரெண்டு அண்ணன் இருக்கீங்க. நீங்க தான் அங்கிள் கிட்ட பொண்ணு கேக்கணும்."
YOU ARE READING
மனம் வருடும் ஓவியமே!
General Fictionஇந்த முயற்சியில் கைகோர்க்கும் எழுத்தாளர்களின் பெயர்கள். 1.dharshinichimba 2.hema4inba 3.Saramohan_ 4.Priyadharshini12 5.bhuvana2206 6.im_dhanuu 7.Ramya_Anamika 8.lakshmidevi 9.Anbin shijo 10.narmadhasenthilkumar 11.bhagi 12.Niru_lakshmigesan 13.Mad...