47. மைண்ட் மிரர்

1.1K 110 48
                                    

47. மைண்ட் மிரர்:

இன்னும் இரண்டு வாரங்களிலேயே நல்ல நாள் இருப்பதாக கூற பெரியவர்கள் மூன்று ஜோடிகளின் திருமணத்தை ஒரே நாளில் ஒரே முகூர்த்தத்தில் நடத்துவதென முடிவெடுத்தனர். திருமண நாள் நெருங்க பெண்ணும் மாப்பிள்ளையும் பார்க்கக்கூடாது என கட்டளையிட விஜய், ஜீவா, நவீன் மூவரும் தவித்துப் போயினர்.

"என்னடா இது பெரிய சோதனயா போச்சு? காதலிச்சவள கூடிய சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்க போறோமுங்குற சந்தோஷத்தவிட ஒரு அஞ்சு நாள் பாக்காம இருக்குற வேதன பெருசா இருக்கே. கல்யாணமே வோணாம்னு காதலிச்சுட்டே இருந்திருக்கலாம் போலயே?" என நவீன் புலம்பிக் கொண்டிருந்தான்.

விஜயோ ஆதுவும் மாதுவும் இணைந்து எடுத்த போட்டோவில் மாதுவை மாத்திரம் பெரிதாக செய்து பார்த்துக்கொண்டிருந்தான்.

ஜீவா இருண்ட இரவு வானில் பிரகாசமாய் ஒளி வீசிக்கொண்டிருந்த பௌர்ணமி நிலவை ரசித்துக்கொண்டிருந்தான். அவனுக்கு அந்த நிலவில் தன் வாழ்வை பிரகாசமாக்க வந்த தன் உயிர்க் காதலி சஞ்சுவின் முகமே விளங்கியது.

"டேய் நவீன் இது கொஞ்சம் உனக்கே ஓவரா தெரியல? சண்டைக் கோழிங்க மாதிரி இருந்த ரொண்டு பேரும் லவ்வர்ஸ் ஆகிட்டு.. அது போதாதுன்னு இந்த லவ் பீல், லவ் டயலாக் எல்லாம் டூ டூ டூ மச் டா" என துருவ் நவீனை சீண்ட, "உனக்கு எங்கடா எங்க கஷ்டம் புரியும்? நீ மேடைல பொண்ணு தயாராகி உக்கார்ந்துட்டிருக்கும் போது உன் பாட்டுக்கு வந்து தாலிய கட்டிட்ட. பட்டால் தான்டா புரியும்" என நவீன் சொல்ல துருவ்வின் முகத்தில் சட்டென கருமை படிந்தது.

'ஏன்டா உனக்கு??' என்பது போல விஜய் நவீனை முறைத்தான்.

'நவீன் உனக்கு உன் வாய்தான் சனின்னு சொல்றது முற்றிலும் சரி தான்டா. நல்லா இருந்த பையன தேவயில்லாதத எல்லாம் பேசி கசப்பான தருணங்கள நியாபகப்படுத்திட்டியே?' என அவன் உள்மனம் அவனைச்சாட குற்றவுணர்வில் தலை குனிந்தான்.

ஆனால், துருவ்வின் மனமோ வேறெதையோ அசை போட்டுக்கொண்டிருந்தது.
'ச்ச்ச... திருமணம்குறது ஒருத்தர் வாழ்க்கைல எவ்ளோ முக்கியமானது. ஆனா, என்னாலயோ என் ஆதுமாவாலயோ அத முழுசா அனுபவிக்க முடியலேயே? ஆது கல்யாணத்துக்குன்னு எத்தனை கனவு கண்டிருந்திருப்பாளோ?' என வருத்தத்தோடு எண்ணிக் கொண்டிருந்தான்.

மனம் வருடும் ஓவியமே!Where stories live. Discover now