43. கதாரசிகை

1.1K 118 23
                                    

43. கதாரசிகை

ராஜேந்திரன் சஞ்சனா கழுத்தில் கத்தியை வைத்திக்க விஜய் துருவ் ஜீவா நவி நால்வரும் பதறி விட சஞ்சனா கத்தியை தட்டி விட முயல அது அவள் மணிகட்டை பதம் பார்த்தது.

சஞ்சனா விழுக போக ஜீவா அவளை தாங்கி பிடிக்க துருவ் ராஜேந்திரனை அடிக்க விஜயும் நவியும் ரவியை தாக்கினர். ராஜேந்திரனும் ரவியும் துருவ் விஜய் நவியை தள்ளி விட்டு மூவரும் சுதாரித்து அவர்களை பிடிக்கும் முன் இருவரும் வெளியில் சென்று கதவை தாழிட்டு விட்டனர்.

ரவி காலில் குண்டடி பட்டிருப்பதால் அவன் தத்தி தத்தி நடக்க ராஜேந்திரன் ரவியை பிடித்து முடிந்த வரை வேகமாக அழைத்து கீழே சென்றார்.

விஜயும் துருவும் கதவை எட்டி உதைத்து திறந்து வேகமாக கீழே செல்வதற்க்குள் இருவரும் வெளியில் காரில் இவர்களுக்காக காத்திருந்த லீனா காரில் ஏறி விட லீனா காரை வேகமாக அங்கிருந்து நகர்த்தினாள்.

சகோதரர்கள் இருவரும் கோவத்தில் காலை தரையில் உதைத்து விட்டு மேலே சென்றனர். சஞ்சனா கையில் ரத்தம் கொட்ட சஞ்சனா கொஞ்ச கொஞ்சமாக மயக்கத்திற்க்கு சென்றுக் கொண்டிருந்தாள்.

ஜீவா அவள் கன்னத்தை தட்டி சனா சனா என்று அழைக்க அவளோ அவள் அணிந்திருந்த ஜீன்ஸ் பாக்கெட்டில் இருந்து ஒரு கைப்பேசியை எடுத்து ஜுவா கையில் கொடுத்தாள்.

ஜுவா புரியாமல் கலங்கிய கண்களுடன் சஞ்சனாவை பார்க்க சஞ்சனா "நா எங்க இருக்கன்னு என் டீம் தெரிஞ்சிக்றதுக்காக எப்பவும் என் கிட்ட ஒரு ட்ராக்டர் இருக்கும் அதோட சிக்னல் ஒன்னு என் டீம் கிட்டையும் இன்னொன்னு இதலையும் கனெக்ட் ஆகி இருக்கும் ராஜேந்தரன் என்னை பிடிச்ச போது என் ட்ராக்கர அவர் பாக்கெட்ல போட்டுட்டன் இதல அதோட சிக்னல் காட்டும் போ ஜீவா போய் அவனையும் அந்த ராபர்டையும் பிடி" என்று கூற

தனக்கு அடிப்பட்ட நேரத்திலும் அவள் தன்னை தன் கடமையை செய்ய சொல்கிறாலே என்று ஜீவாவிற்க்கு மேலும் கண்ணீர் ஊற்றெடுத்தது.

மனம் வருடும் ஓவியமே!Tempat cerita menjadi hidup. Temukan sekarang