8. லட்சுமி தேவி

2.2K 200 126
                                    

8. லட்சுமி தேவி:

"டேய்!!  பப்பு சீக்கிரம் வாடா", என்று  பத்து வயது குட்டி ஆது பப்பு வீட்டிற்கு முன் நின்று கத்தினாள்.

"இதோ வரேன்டி ஆது", என்று கத்திக்கொண்டே வீட்டினுள் இருந்து ஓடி வந்தான் பதிமூன்று வயது பப்பு என்கின்ற  துருவேந்திரன்.

"உனக்காக எவ்ளோ! நேரம் ஃபுட்பால் வச்சிகிட்டு வெயிட் பண்றது சீக்கிரம் வர மாட்டியா டா?", என்றாள் கோபமாக.

"அதான் வந்துட்டேன்ல டி அப்புறம் என்ன வா போலாம்".

கிரவுண்டுக்கு வந்ததும் மற்ற நண்பர்களுடன் இணைந்து ஃபுட்பால் விளையாட ஆரம்பித்தனர்.
"டேய்!  பப்பு என்கிட்ட பாஸ் பண்ணு", என்று கத்தினாள் நம் குட்டி ஆது

"அடியே!! உன்னால அடிக்க முடியாது டி  விழுந்துடுவ".

"அதுலாம் நான் அடிப்பேன் நீ பால பாஸ் பண்ணு", என்று கத்தினாள்.

" நீ சொன்னா கேக்க மாட்ட", என்று அவளிடம்  பாலை பாஸ் பண்ணினான்.

அதை கோல் அடிக்கிறேன்னு
அடிக்கப் போனவள் பால் தடுக்கி கீழே விழுந்து. "ஆஆ... அம்மா', என்று கத்தினாள்.

"ஐயோ போச்ச இதுக்கு தான் சொன்னேன் கேட்டியா", என்று சொல்லிக்கொண்டே ஓடிச்சென்று தூக்கினான்.

அவளை அப்படியே! தோளில் கையை போட்டு அணைத்தபடி அழைத்து வந்து கிரவுண்டில் இருக்கும் ஸ்டோன் பெஞ்சில் உட்கார வைத்து "எங்கடி அடிபட்டிச்சு??",என்று அவள் கைகளை ஆராய்ந்தான்.

"அங்கெல்லாம் அடிப்படுல்ல இங்கதான் அடிபட்டுருக்கு", என்று தன் தொடையில் கல் குத்தி ரத்தம் வந்த இடத்தை காண்பித்தாள்..

"என்னடி இப்படி அடிபட்டுருக்கு இரு அத்தைய கூட்டிட்டு வரேன்", என்று ஓட சென்றவனின் கையை பிடித்து தடுத்து, "ப்ளீஸ் பப்பு அம்மா கிட்டயும் அப்பா கிட்டயும் சொல்லிராத அவங்க ரெண்டு பேரும் என்னை ரொம்ப திட்டுவாங்க நேத்துதான்  கைல சீராச்சுகிட்டு திட்டு வாங்கினேன் ப்ளீஸ்", என்று கெஞ்சினாள்.

மனம் வருடும் ஓவியமே!Donde viven las historias. Descúbrelo ahora