26- மீராஜோ
அப்பொழுது தான் மழை நின்றிருந்தது...
அதன் காரணமாக அந்த வனத்தின் மண்ணும் மரமும் மணக்க, அந்தக் காடே சுகந்த மணம் வீசிக் கொண்டிருந்தது.
அந்த வனம் முழுவதும் இதமான குளிர் பரவியிருந்தது.... எல்லா உயிர்களும் உயிரினங்களும் அந்த இதமான குளிரை ரசித்த வேளையில், ஒரு மர வீட்டில் மட்டும் அநியாயத்திற்கு அனல் அடித்துக்கொண்டிருந்தது!!!
அப்படி என்ன நடக்கிறது அந்த மரவீட்டில்?துருவ் விற்கு, 'ஆது தன்னைத்தான் விரும்புகிறாள்' என்பது தெரிந்த அதேவேளையில், ஆது வுக்கும் தன் மனம் துருவ் விடமே இருப்பதை உணர்ந்ததோடு, தன் மனதில் துருவ் தான் இருக்கிறான் என்பதை உணர வைப்பதற்காக விஜய் துருவ், சுபா மூவரும் சேர்ந்து நடத்திய நாடகத்தில் பிரமித்து நின்றாள்.
பிறகு, துருவ் மற்றும் விஜய் இருவரின் அப்பா செய்த சதி வேலைகளையும், சகோதர்கள் எப்படி இணைந்தார்கள் என்பதையும் கூறி முடித்தனர்...
அதன் பிறகு தங்களைப் பற்றிய எண்ணம் வந்தது, இரு பெண்களுக்கும். இருவரும் சேர்ந்து,
"அது சரி எங்கள பத்திய உண்மை என்ன?' என்று கேட்க,
மூன்று ஆண்களும், நவீன், விஜய், துருவ் மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்தனர்...
"ஏய் என்னங்கடா?... மூணு பேரும் ஒருத்தரை ஒருத்தர் பாத்துட்டு இருக்கீங்க?... என்ன பில்ட்அப் பா?... விஷயத்துக்கு வாங்க டா!" என்று ஆது கூறியதும்,
"ஆது மா! நாம செல்லமா பேசுவதெல்லாம், நம்ம வீட்டுக்குள்ள வச்சுக்கலாம்... இங்கே இத்தனை பேருக்கு நடுவுல.... வேண்டாமடா... அதுமட்டுமல்ல, நாங்க மூணு பேருமே உன்னை விட பெரியவங்க. உறவுக்கு மரியாதை இல்லை என்றாலும், வயசுக்காகவாவது கொஞ்சம் மரியாதை கொடுக்கலாமே ப்ளீஸ்?" என்று துருவ், தன் மனைவியிடம் கொஞ்சி, கெஞ்சி கொண்டு இருக்க,
"அடே அண்ணா! வீட்ல தினமும் இதான் நடக்குதா? பயங்கர பிராக்டிஸ் போல இருக்கு?" என்று விஜய், துருவ் வை கிண்டல் செய்ய...
YOU ARE READING
மனம் வருடும் ஓவியமே!
General Fictionஇந்த முயற்சியில் கைகோர்க்கும் எழுத்தாளர்களின் பெயர்கள். 1.dharshinichimba 2.hema4inba 3.Saramohan_ 4.Priyadharshini12 5.bhuvana2206 6.im_dhanuu 7.Ramya_Anamika 8.lakshmidevi 9.Anbin shijo 10.narmadhasenthilkumar 11.bhagi 12.Niru_lakshmigesan 13.Mad...