32. பாலா ராஜி

1.3K 147 60
                                    

32. பாலா ராஜி

ஆஜானுபாகுவான அழகிய குமரன் காரில் இருந்து இறங்கியதை பார்த்து நவிந்தன் வாய் பிளந்து நிற்க, கெத்தானா அட்டகாசம் மாறா லுக்கோடு அவனை நோக்கி வந்தான் ஜீவா.

வெண்மை நிற கோர்ட் ஸூட்டில், கம்பீர நடை நடந்து வந்தவன் கண்ணை பிரவுன் நிற கூலர் அலங்கரிக்க, நெற்றியில் கரைபுரளும் கேசத்தை ஒற்றை விரல் கொண்டு கலைத்து விட்டுக் கொண்டே, வாயில் சுவிங்கத்தை மென்று, தாடி நீவி, மீசை தூக்கி, கம்பீர தோரனையோடு ராஜகுமாரன் போல் அவன் நடந்து வர, நிச்சயதார்த்தத்தை கண்டு கழிக்க வந்த அத்தனை பெண்களின் கூட்டமும் மயங்கி நின்று அவனைத்தான் ரசித்தது.

அகல்விழி ஆழத்தில் சிக்காதோர் அழகிகள் அல்ல, வெண்நிற பால் தேகத்தில் பவளாதோர் பாவைகள் அல்ல, கன்னக்குழி கால்வாயில் கவிழாதோர்  கன்னியல்ல, செவ்விதழ் சுழிப்பில் சுழலாதோர் சூட்சும நங்கை அல்ல, வஜ்ரம் கொண்ட கம்பீரநடை தேகத்தில் ஆணென்ன? பெண்ணென்ன? மானென்ன? மயிலென்ன?  காளையென்ன? கன்னியென்ன? ஒற்றை நொடி மூச்சடக்கி மூர்ச்சையாகிதான் போவார்கள்.

அனைத்து பார்வைகளையும் இதழ் சுழிப்பில் தடுத்து நிறுத்தியவன், நவிந்தனிடம் வந்து, “எஸ் கி யூஸ் மீ, ஐ வில் மீட் வித் மிஸ்டர். துருவேந்திரன் & விஜயேந்திரன். கேன் யூ ஹெல்ப் மீ.

வாயில் இருந்து ஊற்றிய அருவியை மூட மறந்து ஜீவாவையே பார்த்திருந்தான் நவிந்தன். நவிந்தனின் அருவி கடலை தாண்டி எத்தனை வித கொசுக்கள் அவன் தொண்டையை நனைத்ததோ யாருக்கு தெரியும். திறந்த வாய் மூடாமல் நவி முழிக்க, ஜீவா கொஞ்சமே கொஞ்சம் அழகாய் சிரித்து கொண்டு, அவன் தோளை தொட்டு உலுக்கினான்.

ஆங்... என விழித்த நவிந்தன் மேலிருந்து கீழாக ஜீவாவை ஓர் பார்வை பார்த்து அளந்தான். “ஏன்டா டேய் எங்கருந்துடா எனக்குன்னு வருவ, நிச்சயத்துக்கு வந்த புள்ளைகள ஏ குட்ட கத்திரிக்காக்கு தெரியாம அப்டிகா லவட்டிட்டு போயி கடலை வறுக்கலாம்னு நினச்சேன். ம்ஹும், இந்த ஜென்மத்தில நா நினைச்ச எதுவும் நடக்காது போல, அய்யோ இங்க இருக்குற பார்ட்டிஸ் மொத கொண்டு பாட்டிஸ் வரைக்கும் இவனதானே பாக்குதுங்க, பாவி உன்னலாம் எவன்டா நிச்சயத்துக்கு கூப்டா. மனதிற்குள் ஜீவாவை அக்குவேர், ஆணிவேராக பிரித்து கொண்டிருந்தான் நவிந்தன்.

மனம் வருடும் ஓவியமே!Where stories live. Discover now