19. சல்மா சசிகுமார்:
நித்ராதேவியின் பிடியில் சிக்கிய நம் ஆது அப்போது தான் மெல்ல கண் விழுத்து பார்த்தாள்.
அவள் கண்களுக்கு முன் துருவ் அவளையே விழி இமைக்காமல் பார்த்துகொண்டிருந்தான்.
கண்களை கசக்கிக்கொண்டு மீண்டும் பார்த்தாள் அவன் அங்கு காணவில்லை.
ஏற்கனவே சுதாவும் துருவும் பேசுவதை கேட்ட ஆது மிகுந்த மன உளைச்சலில் இருந்தாள். இதில் இவன் பிம்பம் வேறு வந்து போவதால் மேலும் தலைவலி கூடியது தான் மிச்சம்.
திடீரென அந்த அறை கதவை திறந்துக்கொண்டு துருவ் அறைக்குள் நுழைந்தான்.
" சாரி ஆது மா." என்று துருவ் பேசிக்கொண்டே அவள் அருகில் வந்தான்.
"உனக்கு எவ்வளவு வேனுனாலும் திட்டிக்கோ. அடிக்கணும்னா ரெண்டு அடி கூட போடு. ஆனா, உன்னை மீறி என்னால யோசிக்க முடில ஆது. நீ இல்லாத லைஃப என்னால யோசிச்சு கூட பாக்க முடிலடி" என்று அவளை கண்களில் மொத்தமாய் நிறைத்துக்கொண்டான் துருவ்.
ஆது பதில் ஏதும் பேசவில்லை. அவன் கூறிய வார்த்தைகளே மூளைக்குள் குழப்பத்தின் பிடியில் கொண்டு சென்றது.
" ரொம்ப யோசிக்காத பேபி. வா சாப்டலாம். பிளீஸ்." என்று அவள் விழிகளையே மிகவும் இறைஞ்சி வேண்டினான்.
ஆது என்ன நினைத்தாளோ? அவன் அழைத்ததும் பதிலேதும் பேசாமல் அவன் கன்னங்களில் பளாரென அறைந்தாள்.
"ஆது ... " என்றான் மெதுவாக. அவள் அடித்தது அவனுக்கு கன்னங்களில் வலிக்கவில்லை மாறாக இதயத்தில் வலித்தது.
ஆதர்ஷினியின் மனநிலை வேறாக இருந்தது. அவனை அடித்துவிட்டாளே தவிர முகத்தில் எந்த வித பாவனையும் காட்டவில்லை.
அவளை விசித்திரமாக பார்த்தான் துருவ்.
'இன்னும் இவ கிட்ட எவ்ளோ அடி வாங்கனுமோ கடவுளே' என்று மனதில் நினைத்தான்.'என்ன?' என்பதை போல புருவத்தை உயர்த்தினாள்.
........................................................................
YOU ARE READING
மனம் வருடும் ஓவியமே!
General Fictionஇந்த முயற்சியில் கைகோர்க்கும் எழுத்தாளர்களின் பெயர்கள். 1.dharshinichimba 2.hema4inba 3.Saramohan_ 4.Priyadharshini12 5.bhuvana2206 6.im_dhanuu 7.Ramya_Anamika 8.lakshmidevi 9.Anbin shijo 10.narmadhasenthilkumar 11.bhagi 12.Niru_lakshmigesan 13.Mad...